மேலும் அறிய

Roger Federer Records: போர் கண்ட சிங்கம்.. ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனைகள்..!

Roger Federer Records: கடந்த 24 ஆண்டுகளாக டென்னிஸை கட்டி ஆண்டு வந்த ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்துள்ளார். அவர் இதுவரை டென்னிஸில் புரிந்த சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், கடந்த சில ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், 41 வயதான ஜோரர் பெடரர் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் தொடங்கவுள்ள லவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவஸர்லாந்தில் 1981 ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்த ரோஜர் பெடரர், 1998ல் தனது டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கினார். தனது முதல் ஆட்டத்தில் 1998ல் சுவஸர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில், லூக்கஸ் அர்னால்ட் கெர் என்பவரிடம் தோற்றுப்போனார். அவரின் முதல் தோல்வி அவருக்கே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுருக்கும், ஆனால் அதிலிருந்து தாமாகவே வெளிவந்து கடந்த 24 ஆண்டுகாளாக ஒட்டு மொத்த டென்னிஸ் சாம்ராஜ்ஜியத்தையே கட்டி ஆண்டவர் இன்று தனது ஓய்வை அறிவித்திருகிறார். 

தான் கத்துக் குட்டியாக இருந்த காலத்தில் இருந்த ஜாம்வான்காளையெல்லாம், ஒரு கை பார்த்து தனது அனுபவத்தாலும், சிறப்பம்சம் கொண்ட தனது ஆட்டத்தாலும் டென்னிஸ் உலகில் நிலைத்து நின்றார். ஒரு சுவஸர்லாந்து நாட்டுக்காரன் என்ன செய்து விடுவான் என எண்ணியவர்களுக்கு சூராவளியாக மாறி தனது பதிலடியை, தனது எதிராளிகளுக்கு வடு ஏற்படுத்தியவர். சர்வதேச டென்னிஸில் தான் அறிமுகமான ஆண்டே, ஒற்றையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் தொடரில் வென்று டென்னிஸ் உலகையே தனது பக்கம் திருப்பினார். அதேபோல் இரட்டையர் பிரிவிலும் வென்று அசத்தினார். அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை, 2004, 2006, 2007, 2010, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வென்று மொத்தம் ஏழு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தினை வென்று அசத்தினார். மேலும், 2009 ஆம் ஆண்டில் ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் டைட்டிலையும் வென்றுள்ளார். விம்பிள்டன் நாயகன் என்று அழைக்கப்படும் பெடரர் 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் பதக்கத்தினை வென்று மொத்தம் எட்டு முறை விம்பிள்டன் பதக்கம் வென்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளார்.  

இது இல்லாமல், அமெரிக்க ஓபன் டென்னிஸில் 2004, 2005, 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வென்றும் சாதனை படைத்துள்ளார். மொத்தம் 20 ஓபன் டென்னிஸ் தொடர்களை வென்றுள்ள பெடரர் இதுவரை 1,500க்கும் மேலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  தனது ஓய்வை அறிவித்துள்ள ரோஜர் பெடரர், டென்னிஸில் இருந்து தான் விலகுகிறேன், ரசிகர்களாகிய உங்களிடமிருந்து விலவில்லை என உருக்கமாக குறிப்பிட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பெரும் நெகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. அடுத்த வாரத்தில் லவர் கோப்பை தொடர் தான் அவர் பங்கேற்கவிருக்கும் கடைசி போட்டித் தொடர் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆவலை ஏற்படுத்தியுள்ள போட்டித் தொடராகவே மாறியுள்ளது. இவரது ஆட்டத்தைக் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்பதால் போட்டித் தொடருக்கான ஏற்பாடுகள் வழக்கத்தைவிடவும் மும்முரமாக நடந்து வருகின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Embed widget