மேலும் அறிய

IPL 2021: அஸ்வினை தொடர்ந்து ஜாம்பா, ரிச்சர்ட்சன் விலகல்: ஆர்.சி.பி.,க்கு நெருக்கடி

டெல்லி வீரர் அஸ்வினை தொடர்ந்து பெங்களூர் அணி வீரர்கள் ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகினர்.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது லீக் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளன. இதுவரை 20 லீக் போட்டிகள் முடிந்துள்ளன.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் தகுந்த பாதுகாப்புடன் இந்தத் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

தொடர் தொடங்குவதற்கு முன்பு சில வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்நேரத்தில், அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு எந்தவித பிரச்னையும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், சில வீரர்கள் காயம் காரணமாகவும், பயோ பபுள் விதிமுறைகளால் மன உளைச்சல் ஏற்பட்டும் தொடரில் இருந்து விலகினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். கடந்த ஓராண்டாக பயோ பபுளில் உள்ளதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறி, லியாம் லிவிங்ஸ்டன் விலகினார்.

மேலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ‘யார்க்கர் கிங்’ நடராஜன் தொடரில் இருந்து விலகினார்.

I would be taking a break from this years IPL from tomorrow. My family and extended family are putting up a fight against #COVID19 and I want to support them during these tough times. I expect to return to play if things go in the right direction. Thank you @DelhiCapitals 🙏🙏
— Stay home stay safe! Take your vaccine🇮🇳 (@ashwinravi99) April 25, 2021

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கொரோனா தொற்றுக்கு எதிராக தனது குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம் என்று அவர் அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அஸ்வினை தொடர்ந்து,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

Official Announcment:

Adam Zampa & Kane Richardson are returning to Australia for personal reasons and will be unavailable for the remainder of #IPL2021. Royal Challengers Bangalore management respects their decision and offers them complete support.#PlayBold #WeAreChallengers pic.twitter.com/NfzIOW5Pwl
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 26, 2021

இது தொடர்பாக ஆர்சிபி நிர்வாகம் டிவிட்டர் பக்கத்தில், ‘ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் அவர்கள் விளையாட மாட்டார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அவர்களின் முடிவை மதிக்கிறது மற்றும் அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது’ என பதிவிட்டுள்ளது. அணியின் முக்கிய வீரர்கள் இருவர் தொடரில் இருந்து வெளியேறியிருப்பது பெங்களூரு அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Embed widget