(Source: ECI/ABP News/ABP Majha)
Pro Kabaddi 2023: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை இன்று எதிர்கொள்ளும் தபாங் டெல்லி கேசி.. ஹெட் டூ ஹெட், பெஸ்ட் ப்ளேயர் லிஸ்ட் இதோ!
ப்ரோ கபடி லீக் சீசன் 10 ன் 53வது போட்டியில் இன்று (ஜனவரி 2) குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், தபாங் டெல்லி கேசி அணியும் மோத இருக்கின்றன.
ப்ரோ கபடி லீக் சீசன் 10 ன் 53வது போட்டியில் இன்று (ஜனவரி 2) குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், தபாங் டெல்லி கேசி அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது நொய்டா உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் இன்று இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..?
கடந்த டிசம்பர் 31ம் தேதி பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு குஜராத் ஜெயண்ட்ஸ் இந்த ஆட்டத்தில் களமிறங்கியது. அன்றைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 51-42 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆறாவது வெற்றியாகும்.
தபாங் டெல்லி கேசி அணி தனது கடைசி ஆட்டத்தில் டிசம்பர் 30 அன்று யுபி யோதாஸ் அணியை 35-25 என்ற கணக்கில் தோற்கடித்தது.
குஜராத் ஜெயண்ட்ஸ் vs தபாங் டெல்லி கேசி அணிகள் இதுவரை நேருக்குநேர்
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி கேசி அணிகள் இதுவரை 12 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகள் தலா 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.
குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி கேசி இடையேயான முந்தைய போட்டி தபாங் டெல்லி கேசி அணிவே வெற்றிபெற்றது. டெல்லி அணி கடந்த ப்ரோ கபடி லீக் சீசன் 9ல் 50-47 என்ற கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.
இரு அணிகளும் புள்ளி பட்டியலில் எத்தனையாவது இடம்..?
ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் 6 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், தபாங் டெல்லி கேசி அணி 4 போட்டிகளில் வெற்றி, 3ல் தோல்வியுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
குஜராத் ஜெயண்ட்ஸ் vs தபாங் டெல்லி கேசி முன்னணி வீரர்கள்
குஜராத் ஜெயண்ட்ஸ்
9 போட்டிகளில் 56 ரெய்டு புள்ளிகளுடன், ராகேஷ் குஜராத் ஜெயண்ட்ஸ் ரெய்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராகேஷ் தனது கடைசி போட்டியில் ரெய்டில் 6 புள்ளிகளைப் பெற்றார்.
ப்ரோ கபடி லீக் 10ல் 9 ஆட்டங்களில் 25 டிபெண்ட் புள்ளிகளைப் பெற்ற ஃபாஸல் அத்ராச்சலி குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல், ஆல்-ரவுண்டர் ரோஹித் குலியாவும் இந்த 35 புள்ளிகள் குவித்து கவனிக்க வேண்டிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
தபாங் டெல்லி கேசி
ஆஷு மாலிக் தபாங் டெல்லி கேசி அணியில் முக்கிய ரைடராக இருக்கிறார். இவர் இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 65 ரெய்டு புள்ளிகளை குவித்துள்ளார். அதேபோல், ஆஷிஷ் 7 போட்டிகளில் 19 டிபெண்ட் புள்ளிகளைப் பெற்று, சிறந்த டிஃபெண்டராக ஜொலிக்கிறார்.
பிகேஎல் மைல்கற்கள்:
தபாங் டெல்லி கேசி அணியின் வீரர் விஷால் பரத்வாஜ் 300 டிபெண்ட் புள்ளிகளை எட்ட இன்னும் 1 புள்ளி தேவையாக உள்ளது.
புரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?
ப்ரோ கபடி சீசன் 10 ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.