Pro Kabaddi Final: இன்று முடிவுக்கு வரும் 3 மாத மோதல்! இறுதிப்போட்டியில் ஹரியானா - புனேரி.. ப்ரோ கபடி சாம்பியன் யார்?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் இன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், புனேரி பல்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் நேருக்குநேர் மோத இருக்கின்றன
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் இன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், புனேரி பல்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் நேருக்குநேர் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு வளாகத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் தங்களது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வெறிகொண்டு காத்திருக்கின்றன.
கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..?
கடந்த பிப்ரவரி 28ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனேரி பல்டன்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் புனேரி பல்டன்ஸ் அணி பாட்னா அணியை 37-21 என்ற கணக்கில் வீழ்த்தியது. மேலும், இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் புனேரி அணியின் 18வது வெற்றியாக அமைந்தது.
இதேபோல், கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தங்களது அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 31-27 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை 14 முறை நேருக்குநேர் மோதியுள்ளன.இதில் அதிகபட்சமாக புனேரி பல்டன்ஸ் அணி 8 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.
கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் புனேரி பல்டன்ஸ் அணி 51-36 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் புனேரி பல்டன்ஸ் அணி இதுவரை 22 லீக் போட்டிகளில் 17 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 96 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. மறுபுறம், ஹரியானா ஸ்டீலர்ஸ் லீக் கட்டத்தில் 13 வெற்றி, 8 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் விளையாடி 70 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
இன்று படைக்கவிருக்கும் மைல்கற்கள்:
புனேரி பல்டனை சேர்ந்த மோஹித் கோயத் தனது ப்ரோ கபடி லீக் வாழ்க்கையில் 400 ரெய்டு புள்ளிகளில் இருந்து 4 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. அதேபோல், புனேரி பல்டனின் சங்கேத் சாவந்த் ப்ரோ கபடி லீக்கில் 100 டேக்கிள் புள்ளிகளை எட்ட இன்னும் 6 டிபென்ஸ் புள்ளிகள் எடுக்க வேண்டும்.
இரு அணிகளின் விவரம்:
புனேரி பல்டன்ஸ் : அபினேஷ் நடராஜன், கௌரவ் காத்ரி, சங்கேத் சாவந்த், பங்கஜ் மோஹிதே, அஸ்லாம் இனாம்தார், மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, பாதல் சிங், ஆதித்யா ஷிண்டே, முகமதுரேசா ஷட்லூயி சியான்னே, வஹித் ரெசைமெஹ்ர், ஹர்தீப் எஹமத் முஸ்தாஷ்வர், அஹமது முஸ்தா.
ஹரியானா ஸ்டீலர்ஸ் : கே பிரபஞ்சன், வினய், ஜெய்தீப், மோஹித் கலேர், ராகுல் சேத்பால், ஹிமான்ஷு சவுத்ரி, சித்தார்த் தேசாய், சந்திரன் ரஞ்சித், ஹசன் பல்பூல், நவீன், மோனு, ஹர்ஷ், சன்னி, கன்ஷ்யாம் மகார், ரவீந்திர சவுகான், ஆஷிஷ், மோஹித் நந்தால்
போட்டியை எங்கு காணலாம்..?
டிவி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முதலில்
நேரடி ஸ்ட்ரீமிங் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்