Pro Kabaddi 2023: தொடர் தோல்வியில் தத்தளிக்கும் தமிழ் தலைவாஸ்.. மீண்டும் எழுமா..? இன்று ஹரியானாவுக்கு எதிராக மோதல்!
Tamil Thalaivas vs Haryana Steelers: தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் கீழே உள்ளது.
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 41வது ஆட்டத்தில் இன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ் தலைவாஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியின் மூலம் தமிழ் தலைவாஸ் இந்த சீசனின் ஏழாவது போட்டியில் விளையாடுகிறது.
தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் கீழே உள்ளது. மறுபுறம், ஹரியானா ஸ்டீலர்ஸ் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் மீண்டும் மீண்டு வருமா அல்லது ஸ்டீலர்ஸ் வெற்றிபாதையை தக்க வைக்குமா என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்:
தமிழ் தலைவாஸ்
ரைடர்ஸ்- பவன் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு.
ஆல்-ரவுண்டர்கள்- தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யு.
டிஃபெண்டர்கள்- சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்.
ஹரியானா ஸ்டீலர்ஸ்
ரைடர்ஸ்- சந்திரன் ரஞ்சித், கே பிரபஞ்சன், சித்தார்த் தேசாய், வினய், ஷிவம் பட்டே, விஷால் டேட், ஜெயசூயா என்எஸ், கன்ஷ்யாம் மகர், ஹசன் பால்பூல்.
டிஃபெண்டர்கள்- ஹர்தீப், ஜெய்தீப் தஹியா, ராகுல் சேத்பால், ரவீந்திர சவுகான், மோஹித் நந்தன், மோனு ஹூடா, நவீன் குண்டு, ஹர்ஷ், சன்னி ஷெராவத், மோஹித், ஹிமான்ஷு சவுத்ரி.
ஆல்-ரவுண்டர்கள்- ஆஷிஷ்.
இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்:
ப்ரோ கபடியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன . இந்த 9 ஆட்டங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 4ல் வெற்றியும், தமிழ் தலைவாஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
கடந்த போட்டியில் இரு அணிகளும் எப்படி..?
கடந்த போட்டியில் தங்களது சொந்த மண்ணில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 25-24 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதேபோல், ஹரியானா ஸ்டீல்ஸ் 37-36 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முந்தைய ஆட்டத்தில் தோல்வியடைந்தது. எனவே, இரு அணிகளும் கடந்த போட்டி அடைந்த தோல்வியை இந்த போட்டியில் சரிசெய்ய முயற்சிக்கும்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ஹரியானா ஸ்டீலர்ஸ்
1. ராகுல் சேத்பால், 2. மோஹித் காலிர், 3. ஜெய்தீப் குல்தீப், 4. மோஹித் (கேப்டன்), 5. ஆஷிஷ் புறக்கணிப்பு, 6. வினய், 7. சித்தார்த் தேசாய்.
தமிழ் தலைவாஸ்
1. சாகர் (கேப்டன்), 2. சாஹில், 3. மோஹித், 4. எம். அபிஷேக், 5. ஹிமான்ஷு, 6. அஜிங்க்யா பவார், 7. நரேந்தர் ஹோஷியார்.
போட்டி எத்தனை மணிக்கு? எங்கு தொடங்குகிறது?
போட்டி: தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ், 41வது போட்டி
தேதி: டிச. 25, 2023, இரவு 9:00 மணிக்கு
இடம்: ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை
தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் டெலிகாஸ்ட் விவரங்கள்
டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முதலில்
நேரடி ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்