Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: உ.பி. யோதாஸை ஓடவிட்ட தமிழ் தலைவாஸ் வெற்றி; புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேற்றம்
Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் யு.பி. யோதாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகள் குறித்து இங்கு உடனக்குடன் காணலாம்.
LIVE
Background
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 108வது ஆட்டத்தில் பிப்ரவரி 6ம் தேதியான இன்று தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் கடந்த போட்டியில் எப்படி..?
கடந்த பிப்ரவரி 4ம் தேதி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் 30-42 என்ற கணக்கில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் இது ப்ரோ கபடி லீக் சீசன் 10 இல் தமிழ் தலைவாஸ் அணியின் 11வது தோல்வியாக அமைந்தது.
மறுபுறம், உ.பி யோதாஸ் அணி கடந்த பிப்ரவரி 3ம் தேதி யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 39-23 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணியும், உ.பி யோதாஸ் அணியும் இதுவரை 14 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் அணி 6 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. உ.பி யோதாஸ் 5 முறை வெற்றியுடன் வலம் வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி யோதாஸ் இடையேயான கடைசி ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் 46-27 என்ற கணக்கில் உ.பி யோதாஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் 7 வெற்றிகள் மற்றும் 11 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. அதேசமயம், உபி யோதாஸ் 28 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. இதுவரை 4 வெற்றி, 12 தோல்வி, ஒரு டையுடன் உள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகள்:
தமிழ் தலைவாஸ் : அஜிங்க்யா பவார், நரேந்தர், சாகர் (கேப்டன்), சாஹில் குலியா, எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு
உ.பி யோதாஸ் : பர்தீப் நர்வால் (கேப்டன்), அஷு சிங், ஹரேந்திர குமார், ககன் கவுடா, மஹிபால், நிதேஷ் குமார், சுமித்
இரு அணிகளின் விவரம்:
தமிழ் தலைவாஸ் : அஜிங்க்யா பவார், ஹிமான்ஷு நர்வால், நரேந்திர கண்டோலா, ஹிமான்சு சிங், கே.செல்வமணி, விஷால் சாஹல், நிதின் சிங், ஜதின் ஃபோகட், எம்.லக்ஷ்மன், சதீஷ் கண்ணன், சாகர் ரதி (கேப்டன்), ஹிமான்ஷு யாதவ், எம். அபிஷேக், சாஹில் குலியா , மோஹித் ஜாகர், ஆஷிஷ் மாலிக், அமீர்ஹோசைன் பஸ்தாமி, நிதேஷ் குமார் , ரோனக் கர்ப்,.
உ.பி. யோதாஸ் : குல்வீர் சிங், பர்தீப் நர்வால் (கேப்டன்), சுரேந்தர் கில், மஹிபால், அனில் குமார், சிவம் சவுத்ரி, ககனா கவுடா, ஆஷு சிங், நிதேஷ் குமார், சுமித், ஹரேந்திர குமார் , ஹிதேஷ், கிரண் மகர், விஜய் மாலிக் , குர்தீப், நிதின் பன்வார், ஹெல்விக் வஞ்சலா மற்றும் சாமுவேல் வஃபுலா.
இன்று படைக்கவிருக்கும் மைல்கல்கள்:
உபி யோதாஸ் அணியின் பர்தீப் நர்வால் தனது ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 1700 ரெய்டு புள்ளிகளை பெற இன்னும் 10 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் எம்.அபிஷேக் ப்ரோ கபடி லீக்கில் 100 டிபென்ஸ் புள்ளிகளை எட்ட இன்னும் 4 டிபென்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.
Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: தமிழ் தலைவாஸ் வெற்றி
யு.பி. யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தலைவாஸ் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: வெற்றி வாய்ப்பில் தலைவாஸ்
யு.பி யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தலைவாஸ் அணி 28 புள்ளிகள் எடுத்துள்ளது.
Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: மல்லுக்கட்டும் யோதாஸ்
யு.பி. யோதாஸ் அணி தலைவாஸ் அணிக்கு எதிராக மல்லுக்கட்டி வருகின்றது. இரண்டாம் பாதியின் முதல் 10 நிமிடங்கள் முடிந்த நிலையில் தலைவாஸ் அணி 26 புள்ளிகளும் யோதாஸ் அணி 20 புள்ளிகளும் எடுத்துள்ளது.
Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: முன்னிலை வகிக்கும் தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி யு.பி யோதாஸ் அணியை விட 4 புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
Tamil Thalaivas VS U.P. Yoddhas LIVE: தொடங்கியது இரண்டாவது பாதி
ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது.