Tokyo Paralympics | டோக்கியோ பாராலிம்பிக்: குண்டு எறிதலில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த டேக் சந்த்..!
டோக்கியோ பாராலிம்பிக் எஃப்-55 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் டேக் சந்த் பங்கேற்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தடகள போட்டியில் இந்தியாவின் டேக் சந்த் பங்கேற்றார். இவர் ஆடவருக்கான எஃப்-55 பிரிவு குண்டு எறிதலில் பங்கேற்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியை கொடியை ஏந்திச் சென்றவர் டேக் சந்த் என்பதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இன்று அவர் குண்டு எறிதல் இறுதிப் போட்டியில் தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் ஃபவுல் செய்தார். அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 8.57 மீட்டர் தூரம் வீசினார். மூன்றாவது முயற்சியில் மீண்டும் ஃபவுல் செய்தார். அதன்பின்பு நான்காவது முயற்சியில் 9.04 மீட்டர் தூரம் வீசினார். இந்த ஆண்டில் அவர் வீசிய அதிகபட்ச தூரம் இதுவாகும். இதைத் தொடர்ந்து 5ஆவது மற்றும் 6ஆவது முயற்சியில் அவர் ஃபவுல் செய்தார். அதிகபட்சமாக 9.04 மீட்டர் தூரம் மட்டுமே அவர் வீசினார். இதனால் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஏனென்றால் பிரேசல் வீரர் சான்டோஸ் 12.63 மீட்டர் தூரம் வீசி இந்தப் பிரிவில் உலக சாதனை படைத்தார். அவருக்கு அடுத்து அசர்பைஜான் மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த வீரர்களும் 11 மீட்டர் தூரத்திற்கு மேல் வீசியிருந்தனர். எனவே டேக் சந்த் இறுதியில் 7ஆவது இடத்தை பிடித்தார்.
#Tokyo2020 #Paralympics #ParaAthletics #TekChand's best effort from his lot of 6 throws is 9.04 meters. It may be his season best effort, but is way below the mark set by the previous two para-athletes before him. #Cheer4India #Praise4Para #AbJeetegaIndia #MoreAlike
— Sports For All (@sfanow) August 27, 2021
ஹரியானா மாநிலம் ரிவாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேக் சந்த். இவருக்கு 2005ஆம் ஆண்டு தொழிற்சாலையில் வேலைபார்த்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இவருடைய தண்டுவட பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நடக்க முடியாத சூழல் உருவானது. 2015ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் மூலம் இவருக்கு பாரா தடகள போட்டிகள் குறித்து தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் தடகள போட்டிகளில் பங்கேற்றார்.
முதலில் ஈட்டி எறிதலில் பங்கேற்று வந்த டேக் சந்த் பின்னர் குண்டு எறிதலிலும் கவனம் செலுத்தி வந்தார். எஃப் 55 குண்டு எறிதலில் 2018ஆம் ஆண்டு ஆசிய பாரா போட்டிகளில் வெண்கலம் வென்றார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் குண்டு எறிதலில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் படிக்க: நடப்பு பாராலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி பவினா அரையிறுதிக்கு தகுதி !