Krishna Nagar Wins Gold: பாரா பேட்மிண்டனில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் : அசத்தினார் கிருஷ்ணா நாகர்..!
Krishna Nagar Wins Gold in Paralympics 2020 Badminton: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் எஸ்.ஹெச் 6 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பங்கேற்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் கூம்ப்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் 2 வீரரான கிருஷ்ணா நாகர் ஹாங்காங் சீன வீரர் சு மான் கையை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 14 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை இந்திய வீரர் கிருஷ்ண நாகர் 21-17 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாங்காங் வீரர் 21-16 என்ற கணக்கில் வென்றார். இதனால் இரு வீரர்களும் 1-1 என சமமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. அதில், இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் 21- என்ற கணக்கில் கிருஷ்ண நாகர் வென்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
#Tokyo2020 #Paralympics #Badminton
— Sports For All (@sfanow) September 5, 2021
FIFTH GOLD FOR INDIA! 🥇💙#KrishnaNagar wins the battle that yet again went down to wire, Krishna dug deep to make sure that he came away with GOLD, as he led throughout in the final game!
🇮🇳2-1🇭🇰#Cheer4India #Praise4Para #AbJeetegaIndia
முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியாவின் தருண் தில்லான் இந்தோனேஷிய வீரர் ஃபிரடியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சற்று தடுமாறிய தருண் தில்லான் 21-17,21-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அத்துடன் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதே பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஹேஷ் யேத்திராஜ் பிரான்சு வீரர் லூகாஸ் மசூரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 15-21,21-17,21-15 என்ற கணக்கில் பிரான்சு வீரர் லூகாஸ் மசூர் தங்கப்பதக்கத்தை வென்றார். இறுதி போட்டியில் தோல்வி அடைந்து ஐஏஎஸ் அதிகாரி சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் பாரா பேட்மிண்டனில் இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
மேலும் படிக்க: ஐஏஎஸ் டூ பாராலிம்பிக் வெள்ளி: சுஹேஷ் யேத்திராஜின் நம்பிக்கை பயணம் !