Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் 200 மீட்டரில் ஓட்டத்திலும் டூட்டி சந்த் ஏமாற்றம்!
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் டூட்டி சந்த் பங்கேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் நாளில் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டூட்டி சந்த் பங்கேற்றார். டூட்டி சந்த் பந்தைய தூரத்தை 11.54 நேரத்தில் கடந்து தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 7ஆவது இடத்தை பிடித்தார். இது அவரின் சொந்த சிறப்பான நேரமான 11.17 விநாடிகள் என்பதை விட மிகவும் அதிகமான ஒன்றாகும். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடம் மற்றவர்களில் இருந்து சிறப்பான முதல் 3 நேரங்களை வைத்துள்ள வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதனால் மகளிர் 100 மீட்டர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை டூட்டி சந்த் இழந்தார்.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டூட்டி சந்த் பங்கேற்றார். அதில் டூட்டி சந்த் 4ஆவது ஹீட்ஸ் பிரிவில் ஓடினார். 200 மீட்டர் தூரத்தை டூட்டி சந்த் 23.85 விநாடிகளில் கடந்தார். இது அவரின் சொந்த சிறப்பான நேரமான 23.00 என்பதை மிகவும் அதிகமானது. அத்துடன் இந்த ஹீட்ஸ் பிரிவில் 7ஆவது இடத்தை பிடித்தார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடம் மற்றவர்களில் இருந்து சிறப்பான முதல் 3 நேரங்களை வைத்துள்ள வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதனால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை போல் 200 மீட்டரில் டூட்டி சந்த் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
#Athletics
— India_AllSports (@India_AllSports) August 2, 2021
Dutee Chand finishes LAST (7th) in her Heat clocking 23.85s; OUT of contention for Final.
Dutee's PB: 23.00s #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/e7C4h5neAC
முன்னதாக முதல் நாளில் 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார்.பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பந்தைய தூரத்தை 50.77 நேரத்தில் கடந்து 7ஆவது இடத்தை பிடித்தார். தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
இரண்டாவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்குதகுதிப் பெற்று அசத்தினார். மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. அதில் கமல்பிரீத் கவுர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி.. 1972க்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !