Tokyo olympics: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி. சிந்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி !
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நேற்று உடன் முடிவடைந்தன. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் பி.வி.சிந்து முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை 21-7,21-10 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இரண்டாவது குரூப் போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை 21-9,21-16 என்ற கணக்கில் வென்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச் ஃபெல்டிட்டை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள சிந்து 13ஆவது இடத்திலுள்ள பிளிச்ஃபெல்டிட்டை ஏற்கெனவே 4 முறை வீழ்த்தியிருக்கிறார். இந்தச் சூழலில் இன்றைய போட்டியில் தொடக்கம் முதல் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமில் வேகமாக 11 புள்ளிகளை எடுத்தார். அதன்பின்னர் டென்மார்க் வீராங்கனை சற்று சுதாரித்து கொண்டு ஆட தொடங்கினார். 22 நிமிடங்களில் முதல் கேமை பி.வி.சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமிலும் முதல் கேமை போல் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். இதன்மூலம் காலிறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறியுள்ளார்.
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 29, 2021
P.V Sindhu cruises into QF with 21-15, 21-13 win over World No. 12 Mia Blichfeldt.
📷 : @Olympics #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/zgB5eDaiJ7
ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2008 மற்றும் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி இருந்தார். 2016 மற்றும் 2020ல் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Saina Nehwal:
— Hari Priya CR (@cr_hariPriya) July 29, 2021
2008 - QF
2012 - 🥉
PV Sindhu:
2016 - 🥈
2020 - QF*
For the fourth consecutive time, an Indian woman is through to the quarterfinals of the Olympics. #Tokyo2020 #badminton pic.twitter.com/Rab6L4iXQi
முன்னதாக ஆடவர் இரட்டையர் குரூப் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி-சிராக் செட்டி 21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது. எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது.
அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் முதல் குரூப் போட்டியில் இஸ்ரேல் வீரர் ஸில்பர்மேன் இடம் 21-17,21-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இரண்டாவது குரூப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கெலிஜோவிடம் 21-14,21-14 என்ற கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார். தன்னுடைய இரண்டு குரூப் போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அவரும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் குரூப் பிரிவு போட்டியில் தரவரிசையில் தன்னைவிட மிகவும் பின்தங்கி இருந்த வீரர்களிடம் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
மேலும் படிக்க: வாழ்நாள் முழுதும் தியேட்டரில் இலவச சினிமா: ஐநாக்ஸ் புதிய அறிவிப்பு!