Tokyo Olympic:ஒலிம்பிக் ஹாக்கி :ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் காலிறுதி சென்ற இந்தியா !
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி குரூப் போட்டியில் இந்திய அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி இன்று தனது கடைசி குரூப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியிலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அதில் 13ஆவது நிமிடத்தில் க கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்தினார். முதல் கால்பாதியின் இறுதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது கால்பாதியின் தொடக்கத்தில் இந்திய அணி 17ஆவது நிமிடத்தில் ஒரு ஃபில்ட் கோல் அடித்து அசத்தியது. இதனால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இந்திய வீரர் பிரேந்திர லாக்ரா சிறிய தவறை பயன்படுத்தி கொண்ட ஜப்பான வீரர் டனாகா ஒரு கோல் அடித்தார். இதனால் ஜப்பான் அணி 1-2 என முன்னிலையை குறைத்தது. முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற முன்னிலை பெற்றது.
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
Men's Hockey: India finish off their Group stage in style; beat Japan 5-3.
India's QF opponent will be known once all group stage matches are over. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/RGcKQbtLgL
மூன்றாவது கால் பாதியின் தொடக்கத்தில் ஜப்பான் அணி மேலும் ஒரு ஃபில்டு கோல் அடித்து 2-2 என சமன் செய்தது. ஜப்பான் கோல் அடித்த அடுத்த நிமிடமே இந்திய ஒரு ஃபில்டு கோல் அடித்து 3-2 என மீண்டும் முன்னிலை பெற்றது. மூன்றாவது கால்பாதியின் இறுதியில் இந்திய அணி 3-2 என முன்னிலை வகித்தது. நான்காவது கால்பாதியின் தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் இரண்டு கோல்களை அடித்தது. ஜப்பான் அணியும் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது. அத்துடன் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக பெரும் மூன்றாவது வெற்றி இதுவாகும்.
இந்திய அணி முதல் குரூப் போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என வென்றது. அதன்பின்னர் இரண்டாவது குரூப் போட்டியில் 7-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. நான்காவது குரூப் போட்டியில் இந்திய அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணி நான்கு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடம் பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிச் சுற்றுகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், யமாகுச்சியை வென்று அரையிறுதிக்கு பி.வி. சிந்து தகுதி !