Tokyo Olympics 2020 Wrestling: மல்யுத்தம் முதல் சுற்றில் இந்தியாவின் சோனம் மாலிக் ஏமாற்றம்!
2008 ஒலிம்பிக்கில் சுஷில் குமார், 2012 ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத், 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் ஆகியோர் பதக்கம் வெல்ல காரணம், இந்த ரெபிசாஜ் சுற்று. இந்த முறை அந்த வாய்ப்பும் இல்லை.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், மல்யுத்த விளையாட்டுகள் இன்று தொடங்கின. இதில், இந்தியாவின் சோனம் மாலிக் முதல் சுற்று போட்டியில் இன்று விளையாடினார்.
62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இவர், ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் புலோர்த்தியா குரல்கூவுக்கு எதிராக களமிறங்கினார். போட்டி தொடங்கிய சில நிமிடங்களில், முதல் புள்ளி பெற்று லீட் எடுத்தார் சோனம் மாலிக். அடுத்து நடைபெற்ற கேமில் மற்றுமொரு புள்ளி எடுத்து 2-0 என முன்னிலை பெற்றார். ஆனால், அதிரடியாக கம்-பேக் கொடுத்த மங்கோலியா வீராங்கனை 2 புள்ளிகள் பெற்று சோனம் மாலிக்கை தோற்கடித்தார்.
இருவரும் 2-2 என புள்ளிகள் பெற்றிருந்தாலும், சோனம் புஷ்-அவுட் முறையிலும், புலோர்த்தியா டச்-டவுன் முறையிலும் புள்ளிகளை பெற்றிருந்தனர். இதில், டச்-டவுன் முறையில் புள்ளிகள் வென்ற புலோர்த்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அடுத்த சுற்றுக்கு புலோர்த்தியா முன்னேறினார்.
#Wrestling :
— India_AllSports (@India_AllSports) August 3, 2021
Sonam loses in 1st round (62kg) to Asian Silver medalist from Mongolia.
Will need to wait to see if she is in contention via repechage later. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/U77IMDBsMR
18 வயதாகும் சோனம் மாலிக் இந்தியா சார்பில் மிகவும் குறைந்த வயதில் ஒலிம்பிக் தகுதி பெற்ற மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இவரும் இந்தாண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று 62 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றவர். இதே எடைப்பிரிவில் ரியோவில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இளம் வீராங்கனை முதல் சுற்று போட்டியில் டஃப் ஃபைட் கொடுத்து வெளியேறியுள்ளார். எனினும், ரெபிசாஜ் (repechage) முறைப்படி அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், மங்கோலியா வீராங்கனை புலோர்த்தியா அடுத்த சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியதால், ரெபிசாஜ் வாய்ப்பும் பறிபோனது.
#Wrestling Update:
— India_AllSports (@India_AllSports) August 3, 2021
Sonam Malik eliminated.
No chance of Repechage as the Mongolian opponent to whom she lost in R1 (62kg), is also out.
No other Indian wrestler schedule for today. #Tokyo2020withIndia_AllSports https://t.co/WXndeoTBqC
2008 ஒலிம்பிக்கில் சுஷில் குமார், 2012 ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத், 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்பிருந்ததற்கு காரணம், இந்த ரெபிசாஜ் சுற்று. காலிறுதிக்கு முந்தய சுற்றில் தோற்று போகும் வீரர் / வீராங்கனைகள் எதிர்த்து போட்டியிட்டவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினால், வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்ற வீரர் / வீராங்கனையோடு அரை இறுதியில் போட்டியிட்டவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதுவார். அந்த போட்டியில், முன்பு இறுதி போட்டிக்குச் சென்ற வீரர் / வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
#Wrestling : This is how Repechage round and normal wrestling rounds work.
— Mukesh Srivastwa (@marvelousmukesh) August 3, 2021
Sonam will have to win two matches for Bronze, If Mangolian reaches final.
#Olympics #Tokyo2020 https://t.co/Hmp4JzFFKt pic.twitter.com/dG3NDQSPXk
எளிதாக விளக்க வேண்டும் என்றால், பலம் வாய்ந்த வீரர் / வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்தவர்களுக்கு ‘ரெஸ்க்யூ’ எனப்படும் அந்த தொடரில், மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுவதே ‘ரெபிசாஜ்’. இப்போது இந்த வாய்ப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளதால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து சோனம் வெளியேறியுள்ளார்.