Tokyo Olympics: மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : முதல் சுற்றில் தீபிகா குமாரி வெற்றி !
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரரை வென்றார். இரண்டாவது சுற்றில் அவர் இஸ்ரேல் வீரரிடம் ஷூட் ஆஃப் முறையில் தோல்வி அடைந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடவர் தனி நபர் பிரிவில் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்ய வீரர் 6-0 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் பிரவீன் ஜாதவ் உலகின் நம்பர் ஒன் வீரரான அமெரிக்காவின் ப்ராடியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்றார். அவர் பூட்டான் நாட்டின் கர்மாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 26-23 என்ற கணக்கில் தீபிகா குமாரி வென்றார். அத்துடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டையும் தீபிகா குமாரி 26-23 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் 4-0 என முன்னிலை பெற்றார்.
#IND's Deepika Kumari has it easy in the first round of women's individual recurve, beating #BHU's Karma 6-0 👏💪#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #Archery @ImDeepikaK
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 28, 2021
மூன்றாவது செட்டை 27-25 என்று தீபிகா குமாரி வென்றார். அத்துடன் தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் பூட்டான் வீராங்கனையை வீழ்த்தினார். அத்துடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்று போட்டியில் தீபிகா குமாரி அமெரிக்கா அல்லது உக்ரைன் வீராங்கனையை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
#Archery :
— India_AllSports (@India_AllSports) July 28, 2021
Comfortable 6-0 win for Deepika Kumari in 1st round of Women's Individual event.
📷 : @Olympics #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/AiAssNVpNZ
ஆடவர் தனிநபர் பிரிவில் அடானு தாஸ் மட்டும் நாளை முதல் சுற்றில் களமிறங்க உள்ளார். அவர் முதல் சுற்றில் நாளை சீன தைபேயின் செங்கை எதிர்த்து நாளை காலை 7.40 மணிக்கு விளையாட உள்ளார். ஏற்கெனவே ஆடவர் குழு பிரிவில் இந்திய அணி காலிறுதியில் தென்கொரியா அணியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதன்பின்னர் கலப்பு பிரிவில் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் காலிறுதியில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்கள். டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவிற்கு தொடர்ந்து தோல்விகளாகவே அமைந்து வருகிறது. இதுவரை வில்வித்தையில் இந்திய அணி பதக்கம் எதுவும் வெல்லைவில்லை.
மேலும் படிக்க: ஆடவர் தனி நபர் வில்வித்தை : இரண்டாவது சுற்றில் பிரவீன் ஜாதவ் தோல்வி