India Schedule at Tokyo Olympic 2020:டோக்கியோ ஒலிம்பிக்: நாளை இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இவை தான் !
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்குகின்றனர் என்று தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் மூன்றாவது நாள் இன்று இந்தியாவிற்கு மிகுந்த ஏமாற்றமான நாளகவேஅமைந்தது. டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் மட்டும் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தார். மற்றபடி இன்று நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் தோல்வியை தழுவினார்கள். ஃபென்சிங் போட்டிகளில் முதல் முறையாக இந்தியா சார்பில் களமிறங்கிய முதல் வீராங்கனை என்ற சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி படைத்தார். அத்துடன் முதல் சுற்றில் வெற்றியும் பெற்று ஒரு புதிய வரலாற்றை எழுதினார்.
Big day for India tomorrow!
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 26, 2021
4 medals in offer for 2 shooting events.
Hope Saurabh and Manu turn things around for India this time🤞#TeamIndia #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/xDrbyPymFU
அது தவிர மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானிகா பட்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகிய இருவரும் தோல்வி அடைந்து வெளியேறினர். அதேபோல் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நகல் தோல்வி அடைந்தார். வில்வித்தை ஆடவர் குழுவில் இந்தியாவின் அடானு தாஸ்,தருண்தீப் ராய் பிரவீன் ஜாதவ் ஆகியோர் தோல்வி அடைந்தனர். இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜெர்மனியிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர் தெரியுமா?
- துப்பாக்கிச்சுடுதல்:
- 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவு தகுதிச் சுற்று (காலை 5.30 மணி)- மனு பாக்கர்- சவுரப் சௌதரி, யாஷஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வெர்மா
- 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு தகுதிச் சுற்று (காலை 9.45 மணி)- இளவேனில் வாலறிவன்- திவ்யான்ஷ் சிங், அஞ்சும் மோட்கில்-தீபக் குமார்
- ஆடவர் ஹாக்கி: இந்தியா vs ஸ்பெயின் (காலை 6.30 மணி)
- பேட்மிண்டன்- ஆடவர் இரட்டையர் பிரிவு: சிராக் செட்டி-சத்விக் சாய்ராஜ் vs வென்டி-லென் (பிரிட்டன்) (காலை 8.30 மணி)
- குத்துச்சண்டை: மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு: லோவ்லினா போர்கோஹன் vs நடின் ஏப்டஸ் (காலை 11 மணி)
- டேபிள் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவு: சரத் கமல் vs மா லாங்(சீனா) (காலை 8.30 மணி)
கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலை பொறுத்தவரை இரண்டு தகுதிச் சுற்றுகள் நடைபெறும். அதன்பின்னர் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்திற்கான சுற்றுகள் நடைபெறும். இரண்டாவது தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் 3ஆவது மற்றும் 4ஆவது அணிகள் வெண்கலப்பதக்கத்திற்கும், முதலாவது மற்றும் இரண்டாவது அணிகள் தங்கப்பதக்கத்திற்கும் போட்டியிடுவார்கள்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கியில் ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி!