Hima Das to miss Olympics: முதல் போட்டியே சோகம்: காயம் காரணமாக ஒலிம்பிக்கில் விலகிய ஹிமா தாஸ்!
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான ஹிமா தாஸ் காயம் காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜூலை 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான ஹிமா தாஸ் காயம் காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Sprinter Hima Das to miss her first Olympics due to injury prior to the qualifications in 100 m and 200 m events. pic.twitter.com/ne3ZYj3a5y
— ANI (@ANI) July 6, 2021
4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இருந்த ஹிமா தாஸ், தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, தான் பங்கேற்க இருந்த முதல் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, நான் பங்கேற்க இருந்த முதல் ஒலிம்பிக் தொடரில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், விரைவில் குணமாகி 2022 காமன்வெல்த் போட்டிகள், 2022 ஆசிய விளையாட்டு மற்றும் 2022 உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் விளையாட திரும்பி வருவேன்” என தெரிவித்துள்ளார்.