மேலும் அறிய
Paris Olympic: இந்தியாவிற்கு முதல் பதக்கம்.. துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் புது வரலாறு
கடந்த ஜூன் 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

மனு பாக்கர்
Source : x
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பிரான்ஸில் நேற்று முன் தினம் பிரமாண்டமாக தொடங்கியது 33 வது பாரீஸ் ஒலிம்பிக் தொடர். இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அதே சமயம் ஹாக்கி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
இந்தியாவிற்கு முதல் பதக்கம்:
இந்நிலையில் தான் இன்று (ஜூலை 28) நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















