மேலும் அறிய

Vinesh Phogat: பாலின சோதனையில் தோற்றவர்கள் விளையாடலாம், வினேஷ் போகத் ஆடக்கூடாதா? விளக்கங்கள் என்ன?

Vinesh Phogat Disqualification: 100 கிராம் எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலின சோதனையில் தோற்ற இரண்டு வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

Paris Olympics 2024: பாரிஸில் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இன்று தங்கத்திற்கான அமெரிக்க வீராங்கனையுடன் சாராவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், போட்டிக்குரிய எடையை காட்டிலும் 100 கிராம் அதிகளவு இருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம்(Vinesh Phogat Disqualified) செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலின சோதனையில் தோல்வி:

இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு விதிகளை மிக கடுமையாக பின்பற்றிய ஒலிம்பிக் கமிட்டி, அதே விதிகளை தளர்த்தி அல்ஜீரிய மற்றும் சீன வீராங்கனைகள் இருவரை பங்கேற்க அனுமதித்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வீராங்கனைகள் பலருக்கும் போட்டிகளில் பங்கேற்கும்போது பாலின பரிசோதனை செய்வது வழக்கம். இது குரோமோசோம்களின் எண்ணிக்கை அடிப்படையில் முடிவுகள் வெளியாகும்.

அந்த வகையில், நடப்பு ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இமானே கேலிஃப்(Imane Khelif) மற்றும் சீனாவின் லின் யூ டிங்(Lin Yu-ting) இருவரும் பங்கேற்று ஆடி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்தாண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்தவர்கள்.

ஒலிம்பிக்கில் வாய்ப்பு:

இவர்களை நடப்பு ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்க அனுமதித்தது முதலே தொடர்ந்து சர்ச்சைகள் இருந்து வருகிறது. இத்தாலி வீராங்கனையுடனான மோதலில் பாலின சோதனையில் தோல்வி அடைந்த இமானே கேலிஃப் விடுத்த குத்தில் இத்தாலி வீராங்கனை கார்னியின் மூக்கு உடைந்தது. வெறும் 46 நொடிகளில் இந்த போட்டி முடிந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் வெறும் 46 நொடிகளில் முடிந்தது இதுவே ஆகும்.

அதேபோல, டெல்லியில் கடந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்திற்கான இறுதி மோதல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு  யங் லியூ பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக லின் ஏதும் விளக்கமும் அளிக்கவில்லை.

என்ன நியாயம்?

சர்வதேச குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரில் பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய மற்றும் சீன வீராங்கனை இருவருக்கும் இந்த ஒலிம்பிக்கில் விளையாட அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் ஆடி வரும் சூழலில், இந்திய வீராங்கனைக்கு 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக காரணம் கூறி அவரை தகுதிநீக்கம் செய்திருப்பது மிகவும் மோசமான செயலாக ரசிகர்களாலும், விளையாட்டு வீரர்களாலும் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் எடையை குறைக்க கூடுதல் அவகாசம் தருமாறு கேட்டனர். ஆனால், ஒலிம்பிக் கமிட்டி தர மறுத்துவிட்டது.

இந்தளவு விதிகளை கடுமையாக பின்பற்றும் ஒலிம்பிக் கமிட்டி பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்த இரண்டு வீராங்கனைகளை தொடர்ந்து விளையாட அனுமதித்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்? என்று வீரர்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வினேஷ் போகத் பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால், வினேஷ் போகத்திற்கு எதிராக ஏதேனும் சதி ஏதும் நடந்துள்ளதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget