Paris Olympics 2024: ஹாட்ரிக் பதக்கம் வெல்வாரா மனு பாக்கர்? ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் நிலவரம், இந்தியர்களுக்கான இன்றைய போட்டிகள்
Paris Olympics 2024 Matches Today, august 3rd: பாரிஸ் ஒலிம்பிக்கில் 25மீ பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் இன்று களமிறங்குகிறார்.
Paris Olympics 2024 Matches Today, august 3rd: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் எந்தெந்த போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏழு நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அபாரமான திறமையை வெளிப்படுத்தி வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏழு நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அதன்படி, 13 தங்கம், 9 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 11 தங்கம் உட்பட 36 பதக்கங்களுடன் ஃப்ரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 11 தங்கம் உட்பட 22 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 48வது இடத்தை பிடித்துள்ளது.
வ.எண் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | சீனா | 13 | 9 | 9 | 31 |
2 | ஃப்ரான்ஸ் | 11 | 12 | 13 | 36 |
3 | ஆஸ்திரேலியா | 11 | 6 | 5 | 22 |
4 | அமெரிக்கா | 9 | 18 | 16 | 43 |
5 | இங்கிலாந்து | 9 | 10 | 8 | 27 |
6 | ஜப்பான் | 8 | 4 | 6 | 18 |
7 | தென்கொரியா | 7 | 5 | 4 | 16 |
8 | இத்தாலி | 5 | 8 | 4 | 17 |
9 | நெதர்லாந்து | 4 | 3 | 2 | 9 |
10 | கனடா | 3 | 2 | 6 | 11 |
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:
கோல்ஃப்: ஆண்கள் சுற்று 3 (சுபங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லர்) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: ஸ்கீட் ஆண்கள் தகுதி (அனந்த்ஜீத் சிங் நருகா), ஸ்கீட் பெண்கள் தகுதி (மகேஸ்வரி சவுகான்) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: 25மீ பிஸ்டல் மகளிர் இறுதிப் போட்டி (மனு பாக்கர்) | மதியம் 1 மணி முதல்
படகோட்டுதல்: ஆண்களுக்கான ஒற்றை ஸ்கல்ஸ் இறுதிப் போட்டிகள் | மதியம் 1:12 மணி முதல்
படகோட்டம்: ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 5|6 (விஷ்ணு சரவணன்) | மாலை 3:45 மணி முதல்
வில்வித்தை: பெண்களுக்கான தனிநபர் காலிறுதி (தீபிகா குமாரி & பஜன் கவுர்) | மாலை 4:30 மணி முதல்
வில்வித்தை: பெண்களுக்கான தனிநபர் அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 5:22 முதல்
படகோட்டம்: பெண்களுக்கான டிங்கி ரேஸ் 5|6 (நேத்ரா குமணன்) | மாலை 5:55 முதல்
வில்வித்தை: பெண்களுக்கான தனிப்பட்ட பதக்க சுற்றுகள் (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 6:03 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: ஸ்கீட் ஆண்கள் இறுதிப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 7 மணி முதல்
குத்துச்சண்டை: ஆண்கள் 71 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 7:32 மணி முதல்