Vinesh Phogat:சொந்த நாட்டிடம் தோற்றவர்.. இன்று உலகையே ஆளப்போகிறார்!வினேஷ் போகத்திற்கு ஆதரவாய் பஜ்ரங் புனியா
உலகையே ஆளப்போகும் வினேஷ் போகத் சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்று விட்டார் என்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பகா நடைபெற்று வருகிறது. இதில், இன்று(ஆகஸ்ட் 6)நடைபெற்ற மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில்
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார் வினேஷ் போகத். இதை அடுத்து கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
கால் இறுதியில் உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார். அரை இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 10.25க்கு நடைபெற உள்ளது.
உலகையே வெல்லப் போகிறாள்:
இந்நிலையில் உலகையே ஆளப்போகும் வினேஷ் போகத் சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்று விட்டார் என்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "இன்று நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற இந்திய சிங்கம் வினேஷ் போகத். 4 முறை உலக சாம்பியன் மற்றும் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனை தோற்கடித்தார்.
विनेश फोगाट भारत की वो शेरनी जिसने आज बैक टू बैक मैच में
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) August 6, 2024
4 बार की World Champion और मौजूदा ओलंपिक चैंपियन को हराया
उसके बाद क्वार्टरफाइनल में पूर्व World Champion को हराया
मगर एक बात बताऊं,
ये लड़की अपने देश में लातों से कुचली गई थी
ये लड़की अपने देश में सड़कों पर घसीटी गई…
அதன் பிறகு காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தது. ஆனால் ஒன்று சொல்கிறேன்,இந்த பெண் தன் நாட்டில் அடித்து உதைக்கப்பட்டாள். இந்த பெண் தனது நாட்டில் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த பெண் உலகையே வெல்லப் போகிறாள் ஆனால் இந்த நாட்டில் உள்ள அமைப்பால் தோற்கடிக்கப்பட்டார்"என்று கூறியுள்ளார் பஜ்ரங் புனியா.