Women Olympic Winners: ஒலிம்பிக்கில் இதுவரை இந்திய பெண்கள் செய்த சாதனை! முழு லிஸ்ட்
Indian Women Olympic Winners List: இந்தியா வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இதுவரை இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டுகளில் 7 இந்திய பெண் வீராங்கனைகள் 8 பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை பிரான்ஸ் இந்த முறை நடத்த உள்ளது. அதன்படி வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போட்டிகளில் மிக முக்கியமானது ஒலிம்பிக் தொடர். இதில் இந்த முறை 10,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32 க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன. இந்நிலையில் இந்தியா வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்;
பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்:
இதுவரை இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டுகளில் 7 இந்திய பெண் வீராங்கனைகள் 8 பதக்கங்களை வென்றிருக்கின்றனர். முதன் முதலில் பெண்கள் பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி தான் இந்தியாவிற்கான ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுகொடுத்தார்.
அதிக பதக்கங்களை வென்ற பி.வி.சிந்து:
மொத்தம் 24 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்று இருக்கிறது. இந்திய தடகள வீரர்கள் 35 பதக்கங்களை வென்றுள்ளனர் . இதில் 8 பதக்கங்களை ஏழு பெண் வீராங்கனைகள் பெற்றுள்ளனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்ற ஒரே இந்தியப் பெண்மணியாக இருக்கிறார். ரியோ 2016 இல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் டோக்கியோ 2020 இல் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திஉள்ளார் சிந்து.
வீராங்கனைகள் | |||
---|---|---|---|
கர்ணம் மல்லேஸ்வரி
|
வெண்கலம் | பளு தூக்குதல் (பெண்கள் 54 கிலோ) | சிட்னி 2000 |
சாய்னா நேவால்
|
வெண்கலம் | பூப்பந்து (பெண்கள் ஒற்றையர்) | லண்டன் 2012 |
மேரி கோம்
|
வெண்கலம் | குத்துச்சண்டை (பெண்கள் ஃப்ளைவெயிட்) | லண்டன் 2012 |
பி.வி சிந்து
|
வெள்ளி | பூப்பந்து (பெண்கள் ஒற்றையர்) | ரியோ 2016 |
சாக்ஷி மாலிக்
|
வெண்கலம் | மல்யுத்தம் (பெண்கள் 58 கிலோ) | ரியோ 2016 |
மீராபாய் சானு
|
வெள்ளி | பளு தூக்குதல் (பெண்கள் 49 கிலோ) | டோக்கியோ 2020 |
லோவ்லினா போர்கோஹைன்
|
வெண்கலம் | குத்துச்சண்டை (பெண்கள் வெல்டர்வெயிட்) | டோக்கியோ 2020 |
பி.வி சிந்து
|
வெண்கலம் | பூப்பந்து (பெண்கள் ஒற்றையர்) | டோக்கியோ 2020 |
மேலும் படிக்க: MS Dhoni: தோனியின் எதிர்கால திட்டம் என்ன? ஐபிஎல் உண்டா? இல்லையா? எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட்
மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலிக்கு ஆபத்து? எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியை ரத்து செய்த ஆர்.சி.பி.!