Breaking News LIVE, July 27: பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக வீடியோ காலில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது – 206 நாடுகள் பங்கேற்பு
- ஒலிம்பிக் தொடங்கியதை முன்னிட்டு களைகட்டி காணப்படும் பாரிஸ் நகரம் – லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம்
- ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, சரத்கமல்
- உலகின் விளையாட்டு பிரபலங்கள் ஏற்றி வைத்த ஒலிம்பிக் தீபம் – ரபேல் நடால், செரினா வில்லியம்ஸ் பங்கேற்பு
- ஒலிம்பிக்கில் இன்று இந்தியாவிற்கு துப்பாக்கிச்சுடுதல், பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகள்
- ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகியுள்ள நிலையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்
- நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு
- கர்நாடக காவிரி கரைபிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
- காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை 100 அடியை நெருங்கி வருகிறது – விவசாயிகள் மகிழ்ச்சி
- கார்த்திக் சிதம்பரம் கட்சிக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்கிறார் – காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு
- தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் சவால்
- இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 இன்று நடக்கிறது
Breaking News LIVE: பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக வீடியோ காலில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
மக்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும் பொதுமக்களுடன் நேரடியாக வீடியோ காலில் பேசி குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். மதுரை, நாகப்பட்டினம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பேசி கோரிக்கை கேட்டு நிறைவேற்ற உத்தரவிட்டார். அதில் பலர் குறைகள் உடனடியாக நிறைவேறியதாகவும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
என்றும் மக்களுடன், மக்களின் குறை தீர்க்க!#MakkaludanMuthalvar #DravidianModel pic.twitter.com/A0FJ9rRXcc
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
Breaking News LIVE: டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழா
மேற்கு வங்கம்: கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் 133வது டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது.
#WATCH | West Bengal: Kolkata hosts the opening ceremony of 133rd edition of the Durand Cup football tournament at Salt Lake Stadium.
— ANI (@ANI) July 27, 2024
(Video Source - Durand Cup organising committee) pic.twitter.com/Ycdd6v287n
Breaking News LIVE: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
20 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல்வர்கள்/லெப்டினன்ட் கவர்னர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
Prime Minister Narendra Modi chaired the 9th Governing Council Meeting of NITI Aayog at the Rashtrapati Bhavan Cultural Centre, New Delhi which was attended by Chief Ministers/Lt Governors representing 20 States and 6 UTs.
— ANI (@ANI) July 27, 2024
(Pic: Ministry of Information and Broadcasting) pic.twitter.com/pGiXUA1sDy
Breaking News LIVE: கேரளா: சர்வதேச மலபார் நதி திருவிழா
கேரளா: சர்வதேச மலபார் நதி திருவிழாவின் 10வது பதிப்பு கோழிக்கோடு கோடஞ்சேரியில் நடைபெற்றது
மலபார் நதி திருவிழா என்பது கோழிக்கோட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒயிட்வாட்டர் கயாக்கிங் போட்டியாகும்
#WATCH | Kerala: 10th edition of International Malabar River festival held in Kozhikode's Kodenchery
— ANI (@ANI) July 27, 2024
The Malabar River festival is an annual whitewater kayaking competition held in Kozhikode pic.twitter.com/oNIYpsCr3T
Breaking News LIVE: காவிரியில் தண்ணீர் - 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து காவேரி ஆற்றில் வினாடிக்கு 1.45 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது நாளை மாலை மேட்டூர் அணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் இருக்கக்கூடிய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.