Olympic Games Update: மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தொடர் நடத்தும் ஆஸி: இதே போல இன்னொரு நாடு எது தெரியுமா?
ஆஸ்திரேலியா நாடு மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்த உள்ளது. இதற்கு முன்பு மெல்போர்ன் (1956), சிட்னி (2004) ஆகிய நகரங்களில் ஒலிம்பிக் தொடர் நடத்தப்பட்டது.
2021 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 2032-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் டோக்கியோவை நோக்கி பயணப்பட்டு வருகின்றனர்.
This will be the third time!#Melbourne1956#Sydney2000 #Brisbane2032 #StrongerTogetherhttps://t.co/qaRw70B9Ea pic.twitter.com/jTy3NLIjXy
— Olympics (@Olympics) July 21, 2021
இந்த ஒலிம்பிக் தொடரை அடுத்து, 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் பாரிஸ் நகரிலும், 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2032-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடருக்கான இடமும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் இருந்து இனி வரும் ஒலிம்பிக் தொடர்களை பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் உறுதி அளித்துள்ளது.
இதன் மூலம், ஆஸ்திரேலியா நாடு மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்த உள்ளது. இதற்கு முன்பு மெல்போர்ன் (1956), சிட்னி (2004) ஆகிய நகரங்களில் ஒலிம்பிக் தொடர் நடத்தப்பட்டது. அமெரிக்காவை தொடர்ந்து, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த இருக்கும் நாடாக ஆஸ்திரேலியா அங்கீகாரம் பெற்றுள்ளது.
It's official! The Olympic Games are heading back to Australia for #Brisbane2032!
— Olympics (@Olympics) July 21, 2021
Explore your future Olympics host right here.#FasterHigherStrongerTogether@AUSOlympicTeam pic.twitter.com/CuUvsgCq8s
இந்தியாவைப் பொருத்தவரை, 1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் முதல்முறையாக இந்தியா பங்கேற்றது. இதுவரை, 9 தங்கப்பதக்கங்கள், 7 வெள்ளிப்பதக்கங்கள், 12 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 28 பதக்கங்களை இந்தியா ஒலிம்பிக் தொடர்களில் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க 18 விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் டோக்கியோ விரைந்துள்ளனர்.
இந்தியா சார்பில் 120க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இது கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற 117 பேர் கொண்ட இந்திய அணியை விட மிகவும் அதிகமான ஒன்று. இந்நிலையில் கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் கட்டமாக 90 இந்திய வீரர் வீராங்கனைகள் டெல்லியிலிருந்து டோக்கியோவிற்கு விமானம் மூலம் புறப்பட்டனர்.