மேலும் அறிய

சூர்யகுமார் அதிரடி அரைசதம் - 152 ரன்களை குவித்தது மும்பை

கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்களை அடித்தார்.

ஐ.பி.எல், 14வது தொடருக்கான 5வது போட்டியில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய மும்பை அணியும், முதல் ஆட்டத்தில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்களது முதல் வெற்றியை பெறுவதற்காக இன்று களத்தில் இறங்குகிறது.

மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, குயிண்டின் டி காக்,  சூர்யகுமார் யாதவ், இஷான் கிசான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணால் பாண்ட்யா, ட்ரென்ட் போல்ட், பும்ரா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே களத்தில் இறங்கினர். கொல்கத்தா அணியிலும் அதிரடி வீரர் இயான் மோர்கன், ஆந்த்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன், பாட் கமின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களத்தில் இறங்கினர்.

சூர்யகுமார் அதிரடி அரைசதம் - 152 ரன்களை குவித்தது மும்பை

டாசில் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன், மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து,மும்பை அணியில் ரோகித் சர்மாவும், குயிண்டின் டி காக்கும் ஆட்டத்தை தொடங்கினர். அந்த அணியின் குயின்டின் டி காக் 2 ரன்களுக்கு சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியால் 36 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுக்கு 56 ரன்களை குவித்து ஷகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ரோகித் சர்மா 32 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும், குருணால் பாண்ட்யா 15 ரன்னும், பொல்லார்ட் 5 ரன்னும் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலே வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்துள்ளது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா பேட் செய்ய தயாராகியுள்ளது.

பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget