மேலும் அறிய

Kapil Dev: அழுத்தமா இருக்கா..? அப்ப இந்தியாவுக்காக விளையாடவே வேணாம்.. சீனியர் வீரர்களை சாடிய கபில்தேவ்!

ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது அழுத்ததை உணர்ந்தால், நீங்கள் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று கபில்தேவ் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் கபில் தேவ், ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது அழுத்ததை உணர்ந்தால், நீங்கள் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார், கபில் தேவ் தெரிவித்த இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அது தற்போது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் தொடர்ந்து பல தொடர்களில் விளையாடி வருகின்றனர். இதனால் ஏற்படும் அழுத்ததால் சீனியர் வீரர்கள் சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கும் ஓய்வு அளித்து வருகிறது. 

இந்தநிலையில், கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ், சீனியர் வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு குறித்து கடுமையாக சாடியுள்ளார். அதில், “கடந்த சில நாட்களாகவே நான் அதிகம் கேட்கும் வார்த்தை அழுத்தம். நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம், இதனால் எங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. 

எதற்கு அழுத்தம்..? 

இந்த வார்த்தை ரொம்ப சர்வசாதாரணமா.. அவங்களுக்கு நான் 'விளையாடாதே'னு சொல்றேன்.யாருன்னு கேக்கறது. பிரஷர் இருக்கு.  நீங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள் அது எப்படி அழுத்தமாக இருக்கும். அது எப்படி சாத்தியம்? 100 கோடி நாட்டில், 20 பேர் விளையாடுகிறீர்கள், பிறகு உங்களுக்கு அழுத்தம் இருப்பதாகச் சொல்கிறீர்களா? மாறாக, இது ஒரு பெருமைக்குரிய விஷயம், நீங்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்பைப் பெறுகிறீர்கள். அந்த பெருமையை எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். 

அழுத்தம் என்பது ஒரு அமெரிக்க வார்த்தை. நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால் வேண்டாம் 
உங்களை யாரும் கட்டாயப்படுத்துகிறார்களா?. வாழைப்பழ கடை திறங்கள். முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை ஏன் அழுத்தமாக எடுத்துக்கொள்கிறீர்கள், அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டு வேடிக்கையாக இருங்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

இந்திய வீரர்கள் தங்கள் வேலையை நேசிக்க வேண்டும். நீங்கள் தங்கள் வேலையை முழு மனதுடன் செய்தால் விஷயங்கள் எளிதாகிவிடும். நீங்கள் அதைச் செய்யத் தொடங்கும் நாளில், வேலை எளிதாக இருக்கும். ஆனால் அதே விஷயத்தை நீங்கள் அழுத்தம் என்று அழைத்தால், அதில் எந்த நல்லதும் நடக்காது” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
போதைப்பொருட்களுக்கு 'நோ': மயிலாடுதுறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக திரண்ட அந்த 600 பேர்..!
போதைப்பொருட்களுக்கு 'நோ': மயிலாடுதுறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக திரண்ட அந்த 600 பேர்..!
யார் இந்த பரணிகா இளங்கோவன்? ஆசிய விளையாட்டில் முதல் இந்திய பெண்ணாக சாதனை!
யார் இந்த பரணிகா இளங்கோவன்? ஆசிய விளையாட்டில் முதல் இந்திய பெண்ணாக சாதனை!
IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Embed widget