Ayush Mhatre: CSK-வின் புதிய ப்ளான்! அணியில் இணைகிறாரா இளம் வீரர்? யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
CSK Ayush Mhatre IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற இருக்கும் ஆயுஷ் மாத்ரே யார் என்பதை பற்றி காணலாம்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) சேர்க்கப்படலாம் என பேசப்பட்டு வருகிறது. சென்னை அணியில் பேட்டிங் ஆர்டரில் இருக்கும் சிக்கல்களை சமாளிக்க அணி நிர்வாகம் புதிய வீரரை தேர்வு செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதிரடி பேட்ஸ்மென் ஆய்ஷ் மாத்ரேவின் கிரிக்கெட் பயணம் பற்றி காணலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. தொடரில் ரசிகர்களின் பெரிதும் கொண்டாட கூடிய அணிகள் என்றால் சென்னை, மும்பை, பெங்களூர் என்றே சொல்லலாம். பத்து அணிகளுக்கும் ரசிகர்கள் இருந்தாலும் நட்சத்திர வீரர்கள் இருக்கும் அணியின் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறும். சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், 14 போட்டிகளே முடிந்துள்ளது. தொடர் முழுவதும் இன்னும் சுவாரஸ்யமான போட்டிகள் காத்திருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்திதது. சென்னை அணியின் ஃபீல்டிங், மிடில் ஆர்டர் பேட்டிங், தோனி 9-வதாக களம் இறங்கியது என பல்வேறு பிரச்னைகளை சென்னை அணி சந்தித்து வருகிறது. சென்னை அணி -0.7771 நெட் ரன் ரேட் உடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூர் அணியுடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு, சேப்பாக்கத்தில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருந்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஆளே இல்லை என்ற நிலையில் இருக்கிறது. சென்னை விளையாடிய போட்டிகளில் அணியின் ஃபீல்டிங் சொதப்பலோ சொதப்பல் என்றிருந்தது. பவர் ஹிட்டர், அணியை அதிக ஸ்கோரை Chase செய்யவோ, நல்ல டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணவோ அணியில் யாரும் இல்லாதது சென்னை அணியின் பர்ஃபாமன்ஸை கேள்விக்குள்ளாகியுள்ளது. சென்னை அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தீர்வுக்கு தயாராகும் சி.எஸ்.கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை சேப்பாக்கத்துக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. சி.எஸ்.கே. அணி அவரை ட்ரையல்ஸூக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவிக்கையில், “ ஆம். ஆயுஷ் மாத்ரேவை நாங்கள் ட்ரெயல்ஸூக்காக அழைத்திருக்கிறோம். அவரின் கிரிக்கெட் ஆட்டம் இம்ப்ரெசிவாக இருக்கிறது. அணியில் புதிய வீரருக்கு தேவை ஏற்படுமாயின் அவரை ப்ளேயிங் XI-ல் சேர்க்கப்படலாம். இப்போதைக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. இது Trial மட்டுமே.” என்று தெரிவித்திருக்கிறார். சென்னை அணி நவம்பர் 2024-ல் ஏற்கனவே ஆய்ஷை டிரெயலுக்கு அழைத்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
ஆயுஷ் மாத்ரே மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். 17 வயது இளம் வீரர்.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி சீசனில்(2024-2025) மும்பை அணிக்காக அறிமுகமாகியிருந்தார். 16 இன்னிங்ஸில் 504 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். விஜய் ஹசாரே கோப்பையில் (List A) 7 போட்டிகளில் 458 ரன்களை எடுத்திருந்தார். மகாராஷ்ட்ராவுக்கு எதிரான ஒரு போட்டியில் 176 ரன்களை எடுத்திருந்தார். 22 பவுண்ட்ரிகள், 4 சிக்ஸர் இதில் அடங்கும். அதேபோல, டிஸ்ட் A கிரிக்கெட்டில் 150+ ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
- List A கிரிக்கெட்டில் 150 + ரன்கள் எடுத்த இளம் வீரர் - 117 பந்துகளில் 181 ரன் vs நாகலாந்து அணி / வயது 17 ஆண்டுகள் 291 நாட்கள்.
- ரஞ்சி கோப்பை - தொடக்க ஆட்டத்திலேயே அரைசதம் அடித்தவர் ஆயுஷ் மேத்ரா - 71 பந்துகளில் 52 ரன்கள் vs Baroda
- ருத்ராஜ் கெய்க்வாட் தலமையிலான அனியில் விளையாடி சதம் அடித்தது.
- Ranji Trophy - 232 பந்துகளில் 176 ரன்கள் vs மஹாராஷ்டிரா
- Under19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2024/25 - அதிகபட்ச ரன்எடுத்த இரண்டாவது வீரர் - 176 (Indian U19 team)
- ஆயுஷ் மேத்ரா லிஸ்ட் A கிரிக்கெட்டில் 7 விக்கெட் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடும் ( Sunrisers Hyderabad) தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் ( Abhishek Sharma) விக்கெட்டையும் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஆயுஷ் மாத்ரேவை எந்த அணியும் வாங்கவில்லை. 'Unsold' ப்ளேயர். இப்போது சென்னை அணி அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் மாற்று வீரராகவே அவரை அணியில் சேர்க்க முடியும். அணி வீர்களுக்கு காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக ப்ளேயரை ரீப்ளேஸ் செய்ய முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்ரையல்ஸூக்காக ஆயுஷ் மாத்ரேவை அழைத்திருக்கிறது. ராஜ் கோட்டில் பயிற்சியில் இருந்தவர், சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருக்கிறார். ஆயுஷ் மாத்ரே அணியில் இடம்பெறுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.




















