மேலும் அறிய

IPL 2024: ஐ.பி.எல் சீசன் 17.. கவனிக்கவேண்டிய டாப் - 5 ஆஸ்திரேலிய வீரர்கள் யார்?

ஐபிஎல் சீசன் 17-ல் கவனிக்கவேண்டிய டாப் - 5 ஆஸ்திரேலிய வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.

ஐ.பி.எல் சீசன் 17:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படிமார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளனஇந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதுஇந்நிலையில் கவனிக்க வேண்டிய சிறந்த ஆஸ்திரேலிய வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ட்ராவிஸ் ஹெட்:

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் ட்ராவிஸ் ஹெட்.  முக்கியமாக இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனி ஒரு நபராக களத்தில் நின்று 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக  ரூபாய் 6.80 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டெல்லி டேர்டவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள ட்ராவிஸ் ஹெட் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாட உள்ளார். உலகக் கோப்பை தொடரில் விளையாடியதை போல் இந்த முறை ஐபிஎல் தொடரிலும் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரூன் க்ரீன்:

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் - ரவுண்டர் கேமரூன் க்ரீன். .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கேமரூன் க்ரீன் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார்.  அதன்படி, ரூபாய் 17.5 கோடிக்கு பெங்களூரு அணி இவரை ஏலத்தில் எடுத்து இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் என்பதால் இவரின் தேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கண்டிப்பாக உதவும் என்பது முக்கியமானது.

ஸ்பென்சர் ஜான்சன்:

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன். .பி.எல் தொடரில் இந்த ஆண்டு தான் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு ரன்னர் அப் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி ஸ்பென்சன் ஜான்சனை ரூபாய் 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. முதன் முறையாக ஐபிஎல் தொடரில் களம் காண இருக்கும் ஜான்சன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாட் கம்மின்ஸ்:

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உலகக் கோப்பை கனவை கனவாகவே ஆக்கியவர் பாட் கம்மின்ஸ். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை மைதானத்தில் அமைதியாக இருக்க வைப்போம் என்ற சொன்னார். சொன்னதை அப்படிச் செய்தார். உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு 6 வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். இதனால், ஐபிஎல் தொடரில் இவரின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. அந்தவகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ரூபாய் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அந்த அணியின் கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது. உலகக் கோப்பையை வென்று கொடுத்ததைப்போல் இந்த முறை ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் அணிக்கு பெற்றுக்கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மிட்செல் ஸ்டார்க்:

ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையையும் பெற்றார் மிட்செல் ஸ்டார்க். உலகக் கோப்பை தொடரில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினரை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலும் பேட்டர்களை மிரட்டுவார் என்பது உறுதி என்கின்றனர் ரசிகர்கள்.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்
EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
Embed widget