IPL 2024 Ruturaj Gaikwad: ருதுராஜ் கெய்க்வாட் எப்படிப்பட்டவர் தெரியுமா? சி.எஸ்.கே பயிற்சியாளர் சொன்ன வார்த்தை!
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஷி குறித்து அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் பேசியுள்ளார்
ஐ.பி. எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 31) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் 12 வது லீக் போட்டியில் விளையாடி வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த இரண்டு போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இச்சூழலில் தான் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ஹாட்ரிக் வெற்றி பெறும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் விளையாடி வருகிறது.
ருதுராஜ் எப்படிப்பட்டவர் தெரியுமா?
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஷி குறித்து அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ருதுராஜ் மிகவும் அமைதியான நபர் என்று நான் நினைக்கிறேன். அவர் விளையாட்டில் மாணவராக இருக்கிறார். எப்பொழுதும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவர் இங்கு வந்தது முதல் எங்களிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். பல்வேறு முக்கியமான விஷயங்கள் பற்றி தொடர்ந்து கேட்கிறார். இது நல்ல ஒரு அம்சம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்.”ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது திறமை மற்றும் ஸ்டேட்டர்ஜி கொண்டிருப்பது மட்டும் இல்லை. ஒரு ஸ்டேட்டர்ஜியை ஏன் எதற்கு என்று புரிந்து கொள்வதும்தான். ஒரு பீல்டு பொசிஷன் ஏன் இப்படி இருக்கிறது? ஏன் சில யுத்திகளை பயன்படுத்துகிறோம்? இதை நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கேற்றவாறு திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றிகரமாக செயல்படலாம்.
கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த புரிதல் மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் ஸ்டேட்டர்ஜி எதற்காக உருவாக்கப்பட்டது? ஏன் அதைப் பயன்படுத்துகிறார்கள்? என்று புரிந்து கொள்வது அவசியம். ருதுராஜ் இயற்கையாகவே அமைதியான பாவம் கொண்ட எதற்கும் பதட்டப்படாத நபர். இந்த கண்ணோட்டத்தில் இருந்து அவர் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.மேலும் ஒரு கேப்டனாக இருப்பதில் அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டிருக்கும் நபர்கள் அவரைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் அவருக்கு கேப்டன் பொறுப்பு இயல்பாக நல்லபடியாக அமையும்" என்று பேசியுள்ளார்.
மேலும் படிக்க: MS Dhoni Retire: இது எம்.எஸ் தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனா? ரவி சாஸ்திரி ஓபன் டாக்!
மேலும் படிக்க: IPL 2024 CSK Vs DC: டாஸ் வென்ற டெல்லி..பேட்டிங் தேர்வு! சென்னைக்கு மெகா இலக்கை நிர்ணயிக்குமா?