MI vs PBKS Live Score :மும்பை அணிக்கு 5வது தோல்வி..! பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி..!
IPL MI vs PBKS : மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரின் 23வது ஆட்டமான இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு 5வது தோல்வி..! பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி..!
மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பையின் நம்பிக்கை சூர்யகுமார் யாதவ் அவுட்..!
மும்பை அணியின் நம்பிக்கையான சூர்யகுமார் யாதவ் ரபாடா வீசிய புல்டாஸ் பந்தில் ஓடீன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 30 பந்தில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
12 பந்தில் 28 ரன்கள்..! வெற்றி பெறப்போவது யார்..?
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்படுகிறது.
டேஞ்சர் பேட்ஸ்மேன் பொல்லார்ட் ரன் அவுட்..!
மும்பை இந்தியன்ஸ் அணியின் டேஞ்சர் பேட்ஸ்மேனாகிய பொல்லார்ட் இரண்டாவது ரன் ஓட முயன்றபோது தேவையில்லாத ரன் அவுட்டானார். அவர் 10 ரன்களில் அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 பந்துகளுக்கு 52 ரன்கள் தேவை...! வெற்றி பெறப்போவது யார்..?
மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 29 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் சூர்யகுமார் யாதவும், பொல்லார்டும் உள்ளனர்.