CSK vs RCB LIVE SCORE : சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூர்..! 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
IPL CSK vs PBKS : சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கட்டாய வெற்றியை நோக்கி இன்று களமிறங்குகின்றன.
LIVE

Background
சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூர்..! 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முக்கியமான ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி நம்பிக்கை தோனியும் அவுட்..! வெற்றியின் விளிம்பில் ஆர்.சி.பி..?
சென்னை அணியின் கடைசி நம்பிக்கை கேப்டன் தோனி ஹேசில்வுட் வீசிய 19வது ஓவரில் 1 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.
மொயின் அலி அவுட்..! 12 பந்தில் 39 ரன்கள்..! காப்பாற்றுவாரா தோனி..?
சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடிக்கொண்டிருந்த மொயின் அலி ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாகினார். அவர் 27 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
23 பந்தில் 50 ரன்கள்..! களத்தில் தோனி - மொயின் அலி..!
பெங்களூர் அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை அணிக்கு 23 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி..! அம்பத்தி ராயுடு போல்ட்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அம்பத்தி ராயுடு மேக்ஸ்வெல் பந்தில் 10 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால், சென்னை அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

