Rajasthan Royals vs Royal Challengers Bangalore : தினேஷ் கார்த்திக் அதிரடியால் பெங்களூர் அணி அபார வெற்றி...! ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி..!
RR vs RCB Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெறும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
IPL 2022, Match, RR vs RCB: மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் 2 போட்டியில் ஆடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியும், 2 போட்டியில் ஆடி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 7வது இடத்தில் உள்ள பெங்களூர் அணியும் தங்களது அடுத்த வெற்றிக்காக மோதுகின்றன.
தினேஷ் கார்த்திக் அதிரடியால் பெங்களூர் அணி அபார வெற்றி...! ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி..!
ராஜஸ்தான் அணிக்கு எதிராக சேசிங் செய்த பெங்களூர் அணி 5 பந்துகள் மீதம் வைத்து 170 ரன்கள் இலக்கை எட்டியது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சபாஷ் போட வைத்த ஷாபாஸ் அவுட்...! 12 பந்தில் 15 ரன்கள் தேவை..!
பெங்களூர் அணிக்காக அதிரடி காட்டிய ஷாபாஸ் அகமது 26 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.



















