RR vs DC IPL 2023: பலம் கொண்ட அணியாக ராஜஸ்தான்.. வலுபெறுமா டெல்லி..? யாருக்கு இன்று வெற்றி..?
ராஜஸ்தான் அணி இன்று மதியம் 3 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், இன்று ராஜஸ்தான் அணி மதியம் 3 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லருக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம். இதன் காரணமாக பட்லருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது தேவ்தத் படிக்கல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்கம் தரலாம்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் கொண்ட அணியாக உள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற துடிக்கும். மேலும், ஐபிஎல் 2023 தொடரில் பர்பில் கேப் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் யுஸ்வேந்திர சாஹலை எதிர்கொள்வது டெல்லி அணிக்கு கடினமாக இருக்கும். இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி இரண்டிலும் தோல்வியடைந்தது. டேவிட் வார்னர் தலைமையிலான அணி தற்போது பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் போராடி வருகிறது. இதனால் இவர்கள் மீண்டு வருவது முக்கியமானது.
கடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ப்ரித்வி ஷா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல், இந்தியாவிற்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து மிரட்டிய மிட்சேல் மார்ஸ், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்தே அவுட்டாகி வெளியேறினார். டெல்லி அணியில் தற்போது ஒரே நம்பிக்கையாக இருப்பது அக்சர் பட்டேல் மட்டும்தான். போட்டியின் இறுதிவரை டெல்லி அணிக்காக ரன் குவிக்க போராடினார். பந்துவீச்சில் அன்ரிச் நோர்ஜே தொடக்கத்தில் நன்றாக வீசினால், பின்னால் ரன்னை கட்டுபடுத்த தவறவிட்டார்.
RR vs DC போட்டி விவரங்கள்:
- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், 11வது போட்டி, ஐபிஎல் 2023
- இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
- தேதி & நேரம்: சனிக்கிழமை, ஏப்ரல் 8, பிற்பகல் 3:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
RR vs DC பிட்ச் அறிக்கை:
இன்று கவுகாத்தி பராஸ்பரா ஸ்டேடியத்தில் இரு அணிகளும் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது. பிட்சானது வறட்சி மற்றும் சிறிய புல் காணப்படுவதால் அதை பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது முக்கியமானதாக இருக்கும். மேலும் 200 ரன்களை நெருங்குவது இந்த பிட்சில் நல்ல ஸ்கோராக இருக்கும்.
RR vs DC கணிக்கப்பட லெவன்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஓபேட் மெக்காய், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்
டெல்லி தலைநகரங்கள் (DC):
பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரோவ்மேன் பவல், சர்பராஸ் கான், அக்சர் படேல், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்
சிறந்த பேட்ஸ்மேன் - சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தற்போது சிறந்த பார்மில் இருக்கிறார். இவர் கடந்த இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடி 97 ரன்களுடன், இந்த சீசனி ஆரஞ்சு கேப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அதே வேகத்தை இன்றும் சாம்சன் தொடர்ந்தால், டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், ஆரஞ்சு கேப் வெல்ல வாய்ப்பாகவும் அமையும். மேலும், ஜாஸ் பட்லர் இல்லாததால், சாம்சனுக்கு பேட்டிங்கில் அதிக பொறுப்பு இருக்கும்.
சிறந்த பந்துவீச்சாளர் - யுஸ்வேந்திர சாஹல்
சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லெக்-ஸ்பின்னரான இவர் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதற்கு இந்த சீசன் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி கடந்த சீசன் போல் பர்பிள் கேப்பை வெல்ல முயற்சிப்பார்.
இன்றைய போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு: ராஜஸ்தான் ராயல்ஸ்