RCB vs PBKS: சரவெடியாக வெடித்த பேர்ஸ்டோ பஞ்சாப் கிங்.. ஆர்சிபிக்கு 210 ரன்கள் டார்கெட்!
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்புத் தொடரில் தற்போது வரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த முறை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி தன்னுடைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெற பெங்களூரு அணி தீவிரமாக முயற்சி செய்யும் என தெரிகிறது. அதனை அடுத்து டாஸ் வென்ற பெங்களூரு அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
ஓப்பனிங் களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேட்டர் பேர்ஸ்டோ, ரன்களை குவித்தார். மற்றொரு ஓப்பனரான ஷிகர் தவான் 21 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுன் களமிறங்கிய பனுகா 1 ரன்னுக்கு வெளியேற பஞ்சாப்பை தூக்கி நிறுத்தினார் பேர்ஸ்டோ. 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.
6⃣6⃣ Runs
— IndianPremierLeague (@IPL) May 13, 2022
2⃣9⃣ Balls
4⃣ Fours
7⃣ Sixes@jbairstow21 set the stage on fire 🔥 🔥 & played a stunning stroke-filled knock. 💪 💪 #TATAIPL | #RCBvPBKS | @PunjabKingsIPL
Watch his innings 🎥 🔽https://t.co/pGAkqj7ol8 pic.twitter.com/PccYNVJpoh
அவரைப்போல அதிரடி காட்டிய லியம் லிவிங்ஸ்டன், 42 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஆனால், லியம் அவுட்டானதற்கு பிறகு களமிறங்கிய பேட்டர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் மயாங்க் 19 ரன்களுக்கு வெளியேற, மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருக்கிறது பஞ்சாப் அணி. பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல், சபாஸ் அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 205 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் ஷிகர் தவான் மற்றும் பன்சுகா ராஜபக்சே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலக்கை எட்டி அசத்தியது. ஆகவே கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு இம்முறை ஆர்சிபி அணி பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்