மேலும் அறிய

Points Table IPL 2023: பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப்-4-ல் நுழைந்த மும்பை.. கீழே இறங்கியது யார்?

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணி பெற்ற, த்ரில் வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் ஒரே அடியாக 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணி பெற்ற, த்ரில் வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் ஒரே அடியாக 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 54 லீக் போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக அணிகள் முட்டி மோதி வருகின்றன. அதிலும் முதல் இரண்டு இடங்களை குஜராத் மற்றும் சென்னை அணிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், கடைசி இரண்டு இடங்களுக்கு தான் மீதமுள்ள 8 அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.

நேற்றைய போட்டி:

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி,  டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், வதேரா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதனால் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் ஆறாவது வெற்றி ஆகும்.  இதனால், புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 8வது இடத்தில் இருந்து ஒரே அடியாக 3வது இடத்திற்கு முன்னேற, மற்ற அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி  தோல்வி புள்ளிகள்
குஜராத் 11 8 3 16
சென்னை 11 6 4 13
மும்பை 11 6 5 12
லக்னோ 11 5 5 11
ராஜஸ்தான் 11 5 6 10
கொல்கத்தா 11 5 6 10
பெங்களூரு 11 5 6 10
பஞ்சாப் 11 5 6 10
ஐதராபாத் 10 4 6 8
டெல்லி 10 4 6 8

முதல் நான்கு இடங்களில் யார்?

குஜராத் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் எட்டில் வென்று 16 புள்ளிகளுடன் தொடர்ந்து வலுவாக முதலிடத்தில் நீடிக்கிறது. அதேபோன்று சென்னை அணியும் 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதும் எட்டப்படவில்லை. இதனால் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றி மூலம், மும்பை அணி 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து ஒரே அடியாக 3வது இடத்திற்கு தாவியுள்ளது. அடுத்தடுத்து தோல்வி கண்டு வரும் லக்னோ அணியும் 11 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தளப்பட்டுள்ளது. 

மற்ற அணிகளின் நிலை:

ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 11 போட்டிகளில் விளையாடி, தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள், புள்ளிப்பட்டியலில் முறையே 5 முதல் 8வது இடங்களில் நீடிக்கின்றன. ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி அதில் நான்கில் வெற்றி கண்டு 8 புள்ளிகளுடன் கடைசி இரண்டு இடங்களில் நீடிக்கின்றன.

இன்றைய போட்டி:

பிளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் சூழலில், ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், சென்னை அணி  வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்யலாம். அதேநேரம், ஆரம்பத்தில் சொதப்பினாலும் தற்போது அதிரடியாக விளையாடி வரும் டெல்லி அணி கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று உள்ளது.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை சென்னை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Embed widget