மேலும் அறிய

IPL Points Table: ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் டாப்பில் ராஜஸ்தான்..! மும்பைக்கு கிடைத்தது என்ன?.. மற்ற அணிகள் நிலை?

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

நேற்றைய போட்டி:

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொரு லீக் போட்டியில் வலுவான குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.  இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளி
ராஜஸ்தான் 5 4 1 8
லக்னோ 5 3 2 6
குஜராத் 5 3 2 6
பஞ்சாப் 5 3 2 6
கொல்கத்தா 5 2 3 4
சென்னை 4 2 2 4
பெங்களூரு 4 2 2 4
மும்பை 4 2 2 4
ஐதராபாத் 4 2 2 4
டெல்லி 5 0 5 0

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், லக்னோ, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 2 முதல் 4வது இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முறையே 5  முதல் 9வது இடங்களில் உள்ளன. டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 

இன்றைய போட்டி:

இன்று பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நேரடியாக 3வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேநேரம் பெங்களூரு வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget