PBKS vs CSK: கம்பேக் கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? டாஸ் வென்ற பஞ்சாப் அணி!
PBKS vs CSK: சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி பஞ்சாபில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சார் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர். சென்னை, மும்பை அணியின் கிரிக்கெட் போட்டி என்றால் ரசிகர்களுக்கு குஷிதான்.
22-வது லீக் போட்டி
இந்தத் தொடரின் 22-வது லீக் போட்டி, பஞ்சாப் சண்டிகர் பகுதியில் உள்ள Maharaja Yadavindra Singh International கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியை ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இரண்டு அணிகளும் எந்த மாற்றமும் இன்றி அதே வீரர்களுடன் களம் இறங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சௌத்ரி, கலீல் அகமது, பத்திரனா.
பஞ்சாப் அணி:
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.

