மேலும் அறிய

இன்னும் இரண்டே போட்டிகள்… இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த XI இதோ! இம்பாக்ட் வீரர்கள் யார்யார்?

CSK அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பத்தாவது முறையாக நுழைந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும், குவாலிபயர் 2 இல் மோதுகின்றன.

நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2023 இல் பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பந்து வீச்சாளர்களும் நன்றாகவே செயல்பட்டனர். இதனால் இந்த தொடர் முழுவதும் சுவாரஸ்யமாக அமைந்த நிலையில், இறுதியாக இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பத்தாவது முறையாக நுழைந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும், குவாலிபயர் 2 இல் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சென்னை அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கும். அதே வேளையில், ஐபிஎல் 2023 பதிப்பில் இதுவரை வீரர்கள் எவ்வாறு விளையாடியுள்ளனர் என்பதன் அடிப்படையில் தொடரின் சிறந்த XI ஐப் பார்க்கலாம்.

தொடக்க ஆட்டக்காரர்கள்

தொடக்க ஆட்டக்காரர்களைப் பற்றி பார்த்தால், கண்டிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸை கண்டிப்பாக முன்னிலையில் சொல்லி ஆக வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில், அவர் 14 போட்டிகளில் விளையாடி 730 ரன்கள் குவித்துள்ளார். அவர்களோடு இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று கருதப்படும் இரண்டு திறமையான இந்திய பேட்டர்களான ஜிடியின் ஷுப்மன் கில் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் பிரமாண்டமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பேட்டிங் மாஸ்டர் கிளாஸை வெளிப்படுத்தியுள்ளனர். கில் இதுவரை 722 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை டு பிளெசிஸிடம் இருந்து எடுக்க காத்திருக்கிறார். ஐபிஎல் 2023ல் 14 போட்டிகளில் 625 ரன்களுடன் அதிக ரன்களை குவித்தவர்களில் ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு இணையாக மூத்த வீரர் விராட் கோலி தனது துள்ளலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இன்னும் இரண்டே போட்டிகள்… இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த XI இதோ! இம்பாக்ட் வீரர்கள் யார்யார்?

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டரைப் பற்றி பேசுகையில், சந்தேகத்திற்கு இடமின்றி ரசிகர்களின் விருப்பமான முதல் பெயர் மும்பையின் சூர்யகுமார் யாதவ்தான். Mr 360 என்று அழைக்கபடும் அவர் 15 போட்டிகளில் 544 ரன்கள் குவித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அடுத்ததாக இந்த தொடர் முழுவதும் கொல்கத்தா அணிக்காக உயிரை கொடுத்து விளையாடி அணியை முக்கியமான நேரங்களில் மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு செல்லும், ஐந்து சிக்ஸர் ரிங்கு சிங் கண்டிப்பாக இந்த ஐபிஎல் இன் ஒரு சிறந்த கண்டுபடிப்பு. இந்த சீசனில் ஈர்த மற்றொரு வீரர் சிஎஸ்கேயின் ஷிவம் துபே ஆவார், அவர் எம்எஸ் தோனி தலைமையிலான அணிக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அதிரடியை காட்டினார். தற்போதைய ஐபிஎல் சீசனில், அவர் 15 போட்டிகளில் 386 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இறுதிப்போட்டியை ஆட காத்திருக்கிறார். இந்த தொடரில் சுவாரஸ்யம் என்னவென்றால், சொதப்பிய அணிகளில் பல நல்ல வீரர்கள் தொடர்ந்து நல்ல ஆட்டதி வெளிப்படுத்தினர். அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) நட்சத்திர ஆல்-ரவுண்டர், அக்சர் படேல் ஆகியோர் முக்கிய இடங்களில் உள்ளனர். கிளாசென் மற்றும் அக்சர் இருவரும் முறையே 448 ரன்கள் (12 போட்டிகள்) மற்றும் 283 ரன்கள் (14 போட்டிகள்) குவித்தனர். கிளாசென் ஐபிஎல் தொடரில் த்ரில் சதம் அடித்த போது, அக்சர் தனது பந்துவீச்சு மூலம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!

பந்து வீச்சாளர்கள்

வெற்றியில் முக்கியப் பங்காற்றும் திறமையான பந்துவீச்சாளர்களின் முயற்சி இல்லாமல் கோப்பை கை கூடாது. பெஸ்ட் XI அணியில் கண்டிப்பாக GT ஆல்-ரவுண்டர், ரஷித் கான் இடம்பெறுவர். நடந்துகொண்டிருக்கும் IPL 2023 இல் எல்லா போட்டிகளிலும் முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். அதுமட்டுமின்றி சில போட்டிகளில் பேட்டோடு வந்து இறங்கி சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். அதோடு 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பிள் கேப் பட்டியலில் அவரது அணி வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான முகமது ஷமிக்கு பின்னால் இருக்கிறார். அவர் தற்போது 26 விக்கெட்டுகளுடன் கேப் வைத்திருக்கிறார். அவரும் இந்த பெஸ்ட் லெவனில் இடம்பெறுவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (ஆர்சிபி) துருப்பு சீட்டாக திகழும் முகமது சிராஜ், இந்த பட்டியலில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர். அவர் தனது அணிகளுக்காக ஐபிஎல் மட்டுமின்றி, கடந்த ஒரு வருடமாகவே நேர்த்தியாக பந்துவீசி பல முக்கிய விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தி வருகிறார். அவர் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இன்னும் இரண்டே போட்டிகள்… இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த XI இதோ! இம்பாக்ட் வீரர்கள் யார்யார்?

பெஸ்ட் XI பட்டியல் 

இந்த சீசன் மட்டுமின்றி பொதுவாகவே ஐபிஎல் என்றால் விக்கெட்டுகளை குவிக்கும் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர் சஹால் இதில் கண்டிப்பாக இடம்பிடித்தாக வேண்டும். அவர் இம்முறையும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். அடுத்ததாக 'பேபி மலிங்கா' என அன்புடன் அழைக்கப்படும் சென்னை அணியின் பந்து வீச்சாளர் பதிரனா ஐபிஎல் 2023 இல் அனைவரையும் கவர்ந்துள்ளார். CSK க்காக விளையாடும் மதீஷா பதிரனா, இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் தான் மைதானதிற்குள்ளேயே வருகிறார். தனது வித்தியாசமான ஆக்ஷன் மற்றும் துல்லியமான யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்கிறார். இலங்கையின் இளம் வீரர், தனது அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் வழிகாட்டுதலின் கீழ், பந்தின் மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தி, போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரையும் அணியில் இருந்து புறக்கணிக்க முடியாது.

பெஸ்ட் XI: ஃபாஃப் டு பிளெசிஸ்(C), சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரஷீத் கான், முகமது ஷமி, முகமது சிராஜ், மதீஷா பதிரணா.

Impact Players: யுஸ்வேந்தர் சஹால், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே, நிக்கலஸ் பூரான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Embed widget