Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!
டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளில் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Crime: சுமார் 30 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கொலையாளிக்கு ஆயுள் தண்டனை அளித்து டெல்லி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரவீந்தர் குமார் தனது படிப்பை 6ஆம் வகுப்பிலேயே முடித்துக் கொண்டார். அதன்பின் அவர் தினக்கூலி வேலையில் சேர்ந்து சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ரவீந்தர் குமார் சிறுவர், சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், ”ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவருக்கு விருப்பமான குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதனை 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை சுமார் 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததோடு கொலையும் செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
கைது
பகல் முழுவதும் வேலை செய்யும் ரவீந்தர், இரவில் குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்டவை கொடுத்து அவர்களை தனியாக அழைத்து கடத்தியுள்ளதோடு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், ஆறு வயது சிறுமியின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும்போது ரவீந்தர் குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது இந்த விசாரணை தொடர்பாக சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் ரவீந்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் பிறகே டெல்லி சுக்பீர் நகர் பேருந்து நிலையில் போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்ட ரவீந்தர், 15க்கும் மேற்பட்ட குற்றம் நடந்த இடங்களை போலீசாரிடம் காட்டியுள்ளார். எட்டு ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் ரவீந்தருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் படிக்க