IPL Final CSK Fans: அகமதாபாத் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சி.எஸ்.கே. ரசிகர்கள்..! என்ன காரணம்?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் சென்ற சென்னை அணி ரசிகர்கள், ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்து படுத்து உறங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் சென்ற சென்னை அணி ரசிகர்கள், ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்து படுத்து உறங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர். அது சென்னையா? குஜராத்தா? என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.
மழையால் ரிசர்வ்-டே:
It is 3 o'clock in the night when I went to Ahmedabad railway station, I saw people wearing jersey of csk team, some were sleeping, some were awake, some people, I asked them what they are doing, they said we have come only to see MS Dhoni @IPL @ChennaiIPL #IPLFinal #Ahmedabad pic.twitter.com/ZJktgGcv8U
— Sumit kharat (@sumitkharat65) May 28, 2023