மேலும் அறிய

Chris Gayle IPL Record: IPL-ல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்...கிறிஸ் கெய்லின் சாதனை!

கடந்த 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று 17 சிக்ஸர்களை பறக்க விட்டார் கிறிஸ் கெய்ல்.

.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே  ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை குவித்த வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சிக்ஸர் மழை:

.பி.எல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும்,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியவருமான  கிறிஸ் கெய்ல் இருக்கிறார். அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமானார். அதன்படி, கிங்ஸ் 11, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்த வகையில் கடந்த 2008 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் விளையாடிய கெய்ல் 142 போட்டிகளில் 141 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். இதில் அதிரடியாக விளையாடி 4965 ரன்களை குவித்துள்ளார்.

17 சிக்ஸர்களை பறக்கவிட்ட கெய்ல்:

அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று 17 சிக்ஸர்களை பறக்க விட்டார்.  அதன்படி, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 17  சிக்ஸர்களை விளாசி 175 ரன்களை குவித்தார். இது தான் ஐ.பி.எல் தொடரில் தனி நபர் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. அதேபோல், .பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரரர் என்ற சாதனையையும் தன்வசமே வைத்துள்ளார் கிறிஸ் கெய்ல் தான் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை பறக்க விட்ட வீரராகவும் இருக்கிறார்.

அதேபோல் ஒட்டுமொத்த  .பி.எல் தொடரில் 357 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக பிரண்டன் மெக்கல்லம் இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 73 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை குவித்தார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பிரண்டன் மெக்கல்லம். மூன்றாவது மட்டும் நான்காவது இடத்திலும் கிறிஸ் கெய்ல் தான் இருக்கிறார். அந்தவகையில் 2012 ஆம் ஆண்டில் டெல்லி அணிக்காக 13 சிக்ஸர்களையும், 2015 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக 12 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?

மேலும் படிக்க: Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம் - ஆகாஷ் தீப் ஓபன் டாக்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget