Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம் - ஆகாஷ் தீப் ஓபன் டாக்
இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஆகாஷ் தீப்.
![Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம் - ஆகாஷ் தீப் ஓபன் டாக் Akash Deep was the star of India first session IND VS ENG 4th test dismissed Ben Duckett, Ollie Pope and Zak Crawley to put England under instant pressure Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம் - ஆகாஷ் தீப் ஓபன் டாக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/db9f1d58075e263226573576f02a12fc1708691007258572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ளது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த ஆகாஷ் தீப்:
முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. முன்னதாக இன்றைய போட்டியில் இந்திய அணியின் 313-வது வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஆகாஷ் தீப். அதன்படி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஆகாஷ்.
WWW 🤝 Akash Deep!
— BCCI (@BCCI) February 23, 2024
Follow the match ▶️ https://t.co/FUbQ3Mhpq9#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/YANSwuNsG0
அதன்படி, 21 பந்துகளில் 11 ரன்களை எடுத்த பென் டக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் தன்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதேபோல் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஒல்லி போப் வும் டக் அவுட் முறையில் ஆகாஷிடம் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
பொறுமையாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரரான சாக் கிராலி 42 ரன்கள் எடுத்து ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சாக் கிராலி, பென் டக்கெட் மற்றும் ஒப்பி போப் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளர். அந்த வகையில், 17 ஓவர்கள் வீசிய ஆகாஷ் 70 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது தொடர்பாக பேசிய அவர், "நான் பதட்டப்படவில்லை . எனது பயிற்சியாளர்களுடன் பேசியிருந்ததால், ஆட்டத்தில் கவனமாகவும் பதட்டமில்லாமலும் விளையாட உதவியாக இருந்தது. விரைவாக மூன்று விக்கெட்டுகளை எடுத்தது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் ஒவ்வொரு ஆட்டத்தையும் எனது கடைசி ஆட்டமாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்தவரை முயற்சி செய்து விளையாடுவோன்" என்று கூறினார்.
மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)