IPL 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத 3 வெளிநாட்டு வீரர்கள் பட்டியலும் அவர்கள் ஐபிஎல் போட்டியில் அளித்த பங்களிப்பு குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
![IPL 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்! Mitchell Starc, Sam Billings and Pat Cummins set to miss IPL 2023, know details IPL 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/f82ef847dc6fd66c6c322ae35de9cafb1668430874308588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல்(IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
டிரேடிங் செய்யப்பட்ட வீரர்கள்
இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் மும்பை அணிக்கும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரகுமானுல்லாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டிரேடிங் செய்துள்ளது.
டெல்லியில் இருந்து கொல்கத்தா அணிக்கு ஷர்துல் தாக்குர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.
ஜடேஜா தக்க வைப்பு
சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் ஜடேஜா டிரான்ஸ்ஃபர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. ஆனால், எம்.எஸ்.தோனி அவரை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதேநேரம், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை வீரர்கள் தக்க வைப்பு நாளுக்கு முன்பே சிஎஸ்கே விடுவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத 3 வெளிநாட்டு வீரர்கள்
ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பெங்களூரு அணிக்காக 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2015 ஐபிஎல் சீசனில் மூட்டில் காயம் ஏற்பட்டன் காரணமாக ஆஸ்திரேலியாவிலேயே இருந்தார். மிட்செல் ஸ்டார்க் வருவதற்கு முன் பெங்களூரு அணி ஐபிஎல் பட்டியலில் கடைசியில் இருந்தது. ஆனால், இவரது வருகைக்கு பிறகு பெங்களூரு அணி தலை நிமிர்ந்தது. 2015 ஐபிஎல் சீசனில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2016 ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. 2017 இல் பெங்களூரு அணியுடனான ஒப்பந்தத்தை விலக்கிக் கொண்டார். 2018 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் வாங்கப்பட்டார். எனினும், காயம் காரணமாக அவரால் அந்த சீசனிலும் விளையாட முடியவில்லை. பின்னர் அவரை கொல்கத்தா அணி விடுவித்தது.
2022 ஐபிஎல் சீசனில் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அவர் விளையாடவில்லை. இந்நிலையில், இந்த முறையும் அவர் ஐபிஎல் தொடரை தவறவிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட் கம்மின்ஸ்
கொல்கத்தா அணிக்காக 30 ஆட்டங்களில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாட் கம்மின்ஸ். 2023 ஐபிஎல் சீசனில் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், 2014இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், 2017இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். 2016, 2018, 2019 ஆகிய ஐபிஎல் சீசன்களில் அவர் விளையாடவில்லை.
IPL 2023 Retention LIVE: கொல்கத்தாவிற்கு டிரேடிங் செய்யப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்
2020 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை 15.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 2021, 2022 ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக அவர் விளையாடினார். 2014 முதல் 2021 வரை 37 ஆட்டங்களில் விளையாடி 38 விக்கெட்டுகளை சுருட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேகமாக 14 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து சாதனை புரிந்தார். இந்தச் சாதனையை கே.எல்.ராகுல் உடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
சாம் பில்லிங்ஸ்
இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஐபிஎல் 2023 சீசனில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். கன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதால் ஐபிஎல் சீசனில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
Have taken the tough decision that I won’t be taking part in the next IPL @KKRiders
— Sam Billings (@sambillings) November 14, 2022
Looking to focus on longer format cricket at the start of the English summer with @kentcricket pic.twitter.com/7yeqcf9yi8
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கா இவர் விளையாடினார். 8 ஆட்டங்களில் விளையாடி 169 ரன்கள் பதிவு செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)