மேலும் அறிய

MI vs RR IPL 2023: வெற்றியை பறிப்பாரா ரோகித்..? மீண்டும் தாக்குதலை தொடுப்பாரா சாம்சன்..? மும்பை - ராஜஸ்தான் இன்று மோதல்..!

ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும்.

ஐபிஎல் 16 வது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று இரவு 7 மணிக்கு மோத இருக்கின்றன. இத போட்டியானது மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

சொதப்பும் மும்பை:

இரண்டு தோல்விகளுடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தற்போது இரண்டு தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. கடந்த போட்டியில் தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருந்தாலும், கடந்த போட்டியில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. நேஹால் வதேரா மற்றும் கடந்த போட்டியில் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சை பொறுத்தவரை பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது கடப்பாரை பேட்டிங் வியூகத்தை கையில் எடுத்தால், நிச்சயம் வெற்றிபெறும். 

மிரட்டும் ராஜஸ்தான்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 202 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பரிசளித்தார். பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆடம் ஜம்பா சிறப்பாக ஆடி வருகின்றனர். 

ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும். 

MI vs RR: போட்டி விவரங்கள்:

  • போட்டி – மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல் 2023, போட்டி 42
  • தேதி - 30 ஏப்ரல் 2023
  • நேரம் - மாலை 7:30 மணி
  • இடம் -   வான்கடே ஸ்டேடியம், மும்பை

வானிலை அறிக்கை:

வெப்பநிலை 27 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டத்துடன் இருக்கலாம் ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை. 

MI vs RR: பிட்ச் அறிக்கை:

வான்கடே எப்போதுமே ரன் குவிப்பால் பேட்டர்களுக்கு சொர்க்கமாக இருந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்யும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. 

கணிக்கப்பட்ட அணி விவரம்: 

மும்பை இந்தியன்ஸ்:  ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர்

ராஜஸ்தான் ராயல்ஸ்:  ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget