MI vs GT IPL 2023: இமாலய இலக்கை நிர்ணயம் செய்யுமா மும்பை இந்தியன்ஸ்? டாஸ் வென்ற குஜராத் பந்து வீச முடிவு..!
MI vs GT IPL 2023: மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்துள்ளார்.
MI vs GT IPL 2023: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேருக்கு நேர் மோதுகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்துள்ளார்.
நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், இன்றைய போட்டியில் வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தும் நோக்கிலும் மும்பை அணி களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குஜராத் அணியும் தீவிரம் காட்டி வருகிறது.
நேருக்கு நேர்:
குஜராத் அணி கடந்தாண்டு தான் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான நிலையில், மும்பை அணியுடன் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளது. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில், நடப்பு தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்றாவது முறையாக இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அசத்திய வீரர்கள்:
அதிக ரன்கள் எடுத்த வீரர் - சுப்மன் கில், 108 ரன்கள்
ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் - சுப்மன் கில், 108 ரன்கள்
அதிக விக்கெட் எடுத்த வீரர் - ரஷீத் கான், 4 விக்கெட்கள்
ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் - நூர் அஹமது, 3 விக்கெட்கள்
வான்கடே மைதான புள்ளி விவரங்கள்
வான்கடே மைதானத்தில் மும்பை அணி இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 47 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மும்பை அணி மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. வான்கடே மைதானத்தில் நடப்பு தொடரில் 5 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் 4 முறை வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு தொடரில் சராசரியாக முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் - 193
நடப்பு தொடரில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு - 213