மேலும் அறிய

MI vs DC IPL 2023: தொடர் தாக்குதலில் மும்பை.. கடந்த சீசனில் வலுப்பெற்ற டெல்லி.. ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ்..!

இரு அணிகளும் இடையிலான கடைசி 5 போட்டிகளில், டெல்லி அணி மூன்று முறையும், மும்பை அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். இப்போட்டியானது டெல்லியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் டெல்லிக்கு இது இரண்டாவது சொந்த மைதான போட்டியாகும். டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. மும்பை அணியும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னரும் தலைமை தாங்குகின்றனர். ஐபிஎல் 2023 தொடரில் இந்த இரு அணி கேப்டன்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்றாத வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும். வார்னர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இரண்டு அரைசதங்கள் அடித்தபோதிலும், தோல்வி விளிம்பில் போராடுகிறது. ரோகித் சர்மா இன்னும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. கடுமையாக் போராடி வருகிறார். 

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 17 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் இடையிலான கடைசி 5 போட்டிகளில், டெல்லி அணி மூன்று முறையும், மும்பை அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மும்பை மற்றும் டெல்லி அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி, அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றது. 

மொத்தப் போட்டிகள் 32
மும்பை வெற்றி 17
டெல்லி வெற்றி 15
முடிவு இல்லை 0
மும்பை தோல்வி 15
டெல்லி தோல்வி 17
மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் 218
டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் 213
மும்பை அணியின் குறைந்த மதிப்பெண் 92
டெல்லி அணியின் குறைந்த மதிப்பெண் 66

இன்றைய போட்டியின்மூலம், இந்த இரு அணிகளில் தொடர் தோல்விக்கு இன்று ஒரு முடிவு கிடைக்கும். தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் டெல்லி அணி, எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும். டெல்லி கோட்லா ஒரு சிறிய மைதானம் எனவே டெல்லி முடிந்த அளவு வெற்றியை ருசிக்க கடுமையாக போராடும். 

DC vs MI ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ்:

  • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: ரோஹித் சர்மா - 727
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: ரிஷப் பந்த்-372
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக விக்கெட்டுகள்: ஜஸ்பிரித் பும்ரா 23
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள்: அமித் மிஸ்ரா- 19
புள்ளி விவரங்கள் வீரர்கள் மதிப்பீடு
அதிக ரன்கள் ரோஹித் சர்மா (மும்பை) 727 ரன்கள்
அதிக விக்கெட்டுகள் ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) 23 விக்கெட்டுகள்
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் வீரேந்திர சேவாக் (டெல்லி) 95* ரன்கள்
சிறந்த பந்துவீச்சு படம் லசித் மலிங்கா (மும்பை) 5/13

கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:

டெல்லி கேபிடல்ஸ் அணி : டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, ரிலீ ரோசோவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், லலித் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget