மேலும் அறிய

MI vs CSK, IPL 2023: முதல் வெற்றியை பறிக்குமா மும்பை.. டாஸ் வென்ற சென்னை முதலில் பீல்டிங்

ஐபிஎல் தொடரின் 1000-ஆவது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடும் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 1000-ஆவது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடும் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை - மும்பை மோதல்:

ஐபிஎல் சீசனின் 12 வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. சென்னை அணி தான் விளையாடிய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி, புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரவும், மும்பை அணி வெற்றிக்கணக்கை தொடங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதோடு, ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் வென்று வரலாற்றில் இடம்பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன.

சென்னை அணி நிலவரம்

சென்னை அணியை பொருத்தவரையில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.  அதேநேரம், கடந்த போடியில் பந்துவீச்சில் அசத்திய மொயீன் அலி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.  ஆனால், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு ம்ற்றும் ரவீந்திர ஜடேஜா,  எம்எஸ் தோனி  மற்றும் ஷிவம் துபே அகியோர்  சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. அதோடு  மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர் மற்றும் துஷார் பாண்டே ஆகியோர் ரன்களை வாரி வழங்குவது சென்னை அணிக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

மும்பை அணி நிலவரம்:

மும்பை அணியை பொருத்தவரையில் முதல் போட்டியில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட்  மற்றும் கேமரூன் கிரீன் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டி உள்ளது. திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோர் மும்பை அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான் அகியோர் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டியது கட்டாயம் அதேநேரம், பந்துவீச்சில் ஏதேனும் புதுவீரர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

நேருக்கு நேர்:

மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி, ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என அழைக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இந்த இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மும்பை வான்கடே மைதானம்:

வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதிலும் 7 வெற்றியுடன் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் சென்னைக்கு எதிரான போட்டிகளில் மும்பை 70% வெற்றி சாதனை படைத்துள்ளது. 

விளையாடிய போட்டிகள் - 10
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் - 7
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 3
முடிவு இல்லாத போட்டிகள் - 0

கடந்த 5 மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகள்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதில், கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் கடைசி பந்தில் கிடைத்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget