LSG vs RCB Live Score: சுழலில் மிரட்டல்..108 ரன்களுக்கு லக்னோ ஆல்-அவுட்.. பெங்களூரு அபார வெற்றி
LSG vs RCB, IPL 2023 Live: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது.
LIVE
Background
LSG vs RCB, IPL 2023 Live: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
பெங்களூரு - லக்னோ மோதல்:
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 43வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.இந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் லக்னோ அணியும், நடப்பு தொடரில் ஏற்கனவே இவர்களிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி தடும் வகையில் பெங்களூரு அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
பெங்களூரு அணியின் பலம், பலவீனம் என்ன?
பெங்களூர் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட்கோலி அற்புதமான ஃபார்மில் உள்ளார். அவருடன் ஆட்டத்தை தொடங்கும் டுப்ளிசிஸ் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார். மேக்ஸ்வெல்லும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். அந்த அணியை பொறுத்தவரையில் இவர்கள் 3 பேர் மட்டுமே பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். மிடில் ஆர்டர், டெயிலண்டர்கள் யாரும் பேட்டிங்கில் இதுவரை ஜொலிக்கவில்லை. இளம் வீரர்கள் லோம்ரார், பிரபுதேசாய், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
முகமது சிராஜ் மட்டுமே இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக பந்துவீசி வருகிறார். கடந்த சீசன்களில் அசத்திய ஹர்ஷல் படேல் ரன்களை வாரி வழங்குகின்றார். இளம் வீரர் வைஷாக் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். சுழலில் ஹசரங்கா அசத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. அணி ஏறுமுகத்துடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறும்.
லக்னோ அணியின் பலம், பலவீனம்?
லக்னோ அணியை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் இன்னும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி ஆடவில்லை. அந்த அணியின் பலமாக மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் ஸ்டோய்னிஸ், பூரண் அதிரடியை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பெங்களூர் அணி வீரர்கள் இவர்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றியை சாத்தியப்படுத்த முடியும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் பெரியளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே கூறலாம். மைதானத்தின் தன்மை பொறுத்து பந்துவீச்சு எடுபட வாய்ப்புள்ளது. லக்னோ அணியின் ஆவேஷ்கான், உனத்கட், கிருஷ்ணப்ப கவுதம், கரண் சர்மா, ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
பெங்களூரு அபார வெற்றி
லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றது
23 ரன்கள் தேவை..
லக்னோ வெற்றி பெற 6 பந்துகளில் 23 ரன்கள் தேவை
9வது விக்கெட்டும் காலி..
நவீன் உல் - ஹக் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்
100 ரன்களை எட்டிய லக்னோ
18.3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியுள்ளது
கடைசி 12 பந்துகள்..
லக்னோ வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை