(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: பவுலிங்கில் கலக்கிய ஆர்.சி.பி; மோசமான சாதனையைப் படைத்த குஜராத் டைட்டன்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது குஜராத் டைட்டன்ஸ்.
இந்த சீசனில் பவர்ப்ளேவில் குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை செய்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று(மே4) 52 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்ப்ளேயில் குறைவான ரன்களை பெற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்திருக்கிறது. முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
குஜராத் அணியின் மோசமான சாதனை:
GUJARAT TITANS - 19 FOR 3 AFTER 5.3 OVERS. 🤯
— Johns. (@CricCrazyJohns) May 4, 2024
RCB dominance at Chinnaswamy. pic.twitter.com/SqIhlRte9W
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்மன் சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள். இதில் 7 பந்துகள் களத்தில் நின்ற விருத்மன் சாஹா 1 ரன் மட்டுமே எடுத்து முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், சுப்மன் கில்லும் 7 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். 1 ரன்னில் ஒரு விக்கெட், அடுத்ததாக 10 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய சாய் சுதர்சன் 14 பந்துகள் களத்தில் நின்று 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இவ்வாறாக பவர்ப்ளே முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த சீசனில் பவர்ப்ளேவில் மிகவும் குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை செய்திருக்கிறது குஜராத் டைட்டன் அணி.
GUJARAT TITANS - 19 FOR 3 AFTER 5.3 OVERS. 🤯
— Johns. (@CricCrazyJohns) May 4, 2024
RCB dominance at Chinnaswamy. pic.twitter.com/SqIhlRte9W
இந்த சீசனைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு பவர்ப்ளேவில் 27 ரன்கள் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 28 ரன்களும், இதே குஜாராத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rohit Sharma: மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! தொடர்ந்து சொதப்பும் ரோகித்! என்னவாகும் உலகக்கோப்பை கனவு?
மேலும் படிக்க: https://tamil.abplive.com/sports/cricket/rohit-sharma-has-only-scored-65-runs-in-his-last-five-innings-ipl-2024-181646