Rohit Sharma: மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! தொடர்ந்து சொதப்பும் ரோகித்! என்னவாகும் உலகக்கோப்பை கனவு?
இந்திய டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் இந்த லீக்கில் இதுவரை 51 போட்டிகள் முடிந்துள்ளன. அந்தவகையில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் 12 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் 12 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிம் இருக்கிறது. ஆனால் ஐ.பி.எல் கோப்பையை 5 முறை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது.
ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட ஸ்டார் ப்ளேயர்ளை கொண்ட அந்த அணி முதல் அணியாக வெளியேறி இருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சொதப்பி வருவதும் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது.
மீண்டு வருவாரா ரோகித் சர்மா?
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகக் கோப்பை டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா முதல் 6 இன்னிங்ஸ்களில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினார். அதன்படி, 52.2 என்ற ஆவரேஜில் 261 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனால், கடைசி 5 போட்டிகளில் சொதப்பி வருகிறார். கடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 5 போட்டிகளில் 13 என்ற ஆவரேஜில் வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். உலகக் கோப்பை டி20 போட்டிக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில் இது போன்ற சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ரோகித் சர்மா.
ICT fans reaction since the #T20WC2024 team announced pic.twitter.com/TgIcqhHRMS
— Rajabets 🇮🇳👑 (@smileagainraja) May 3, 2024
மறுபுறம் ஹர்திக் பாண்டியாவும் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்து வருகிறார். கேப்டன் மற்றும் துணைக் கேப்டன்களாக உலகக் கோப்பை போட்டிக்கு அறிவிக்கப்படிருக்கும் இவர்கள் இதே போல் தொடர்ந்து செயல்பட்டால் உலகக் கோப்பை கனவு என்னவாகுமே என்று ரசிகர்கள் குமுற ஆரம்பித்துவிட்டனர். இதனை கருத்தில் கொண்டு இனிவரும் போட்டிகளிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
மேலும் படிக்க: T20 World Cup 2024: இந்தியரின் தலைமையின் கீழ் அமெரிக்க டி20 உலகக் கோப்பை அணி.. இத்தனை இந்தியர்களுக்கு அணியில் இடமா..?
மேலும் படிக்க:IPL 2024: முள்படுக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற என்ன செய்ய வேண்டும்..?