IPL 2024 KKR vs DC: டாஸ் வென்ற டெல்லி..பேட்டிங் தேர்வு; அதிரடி ஆட்டத்தை தொடங்குமா?
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 முறையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 முறையும் பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டியில் முடிவு இல்லை.
கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் இதுமாதிரியான ஸ்கோர் போர்டை எதிர்பார்க்கலாம். இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை துரத்தி வெற்றிபெற்றது.
மேலும், இந்த ஸ்டேடியத்தின் பிட்ச் பிளாடாக இருக்கும் நிலையில், வேக பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் மூலம் விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு அதிகம். இரண்டாவது இன்னிங்ஸின்போது சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது சுழல் மூலம் விக்கெட்களை வீழ்த்தலாம்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மொத்தம் 91 போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 37 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 54 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 176 ரன்கள் ஆகும்.
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ்:
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இமாலய இலக்கை டெல்லி அணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):
பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ராமந்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்):
பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது