மேலும் அறிய

KKR vs RR IPL 2023 Playing XI: இரு அணியிலும் சதம் விளாசிய இளம் வீரர்கள்.. வெற்றி யாருக்கு? ப்ளேயிங் லெவன் இதோ..!

KKR vs RR IPL 2023 Playing XI: கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசன் இப்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் 4 இடங்களுக்குள் இடம் பிடிக்கும் வகையில், ஒவ்வொரு போட்டியும் அனைத்து அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. களமிறங்கிய 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. மீதமுள்ள 9 அணிகளில் யார் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறுவார்கள் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது. இந்த சீசனின் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தற்போது தலா 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும் என்பதால் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டாஸ் 

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் ஃபீல்டிங் செய்யும் என அறிவித்துள்ளார். 

இந்த சீசனின் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று வலுவான அணியாக களமிறங்குகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த 6 போட்டிகளில் 5ல் தோல்வியை சந்தித்துள்ளது. 

நேருக்குநேர்: 

ஐபிஎல் போட்டியில் இதுவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 26 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இரு அணிகள் மோதும் இந்த முக்கியமான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை நடந்த 83 ஐபிஎல் போட்டிகளில், இலக்கை விரட்டிய அணி 49 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 34 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: 

ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள் 

சுயாஷ் சர்மா, வைபவ் அரோரா, என் ஜெகதீசன், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன் 

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்

டோனாவன் ஃபெரீரா, தேவ்தத் படிக்கல், ரியான் பராக், முருகன் அஷ்வின், நவ்தீப் சைனி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
Embed widget